[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

பி.எம்.டபுள்யூ காரை திருப்பி வழங்க தீபா கர்மாகர் முடிவு

deepa-decided-to-return-bmw-car

ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் தனக்குப் பரிசாக வழங்கப்பட்ட பி.எம்.டபுள்யூ காரை பராமரிக்க இயலாததால், திருப்பி வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் இறுதிச்சுற்று வரை முன்னேறினார். அவருக்கு நான்காவது இடம் கிடைத்தது. இதன் மூலம் ஒலிம்பிக் விளையாட்டில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமையை தீபா கர்மாகர் பெற்றார். இதையடுத்து அவரை ஊக்குவிக்கும் வகையில் ஹைதராபாத் பேட்மிண்டன் சங்கம் சார்பில் பி.எம்.டபுள்யூ கார் பரிசாக வழங்கப்பட்டது. திரிபுராவில் உள்ள சாலைகளில் அந்த காரை ஓட்டுவதற்கு சிரமமாக இருப்பதாகவும், பராமரிப்புச் செலவு அதிகமாக உள்ளதாகவும் கூறிய தீபா, காரை திருப்பி வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இது குறித்து தீபாவிடம் பேசி முடிவெடுக்கப்படும் என ஹைதராபாத் பேட்மிண்டன் சங்கத் தலைவர் சாமூண்டேஸ்வரிநாத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close