[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

அக்டோபர் 15-ஆம் தேதி பிசிசிஐ பொதுக்குழு: லோதா குழு பரிந்துரை குறித்து ஆலோசிக்க திட்டம்

bcci-calls-for-sgm-on-october-15

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு டெல்லியில் வரும் 15-ஆம் தேதி கூடுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கின் ஒருபகுதியாக பிசிசிஐயை சீரமைப்பதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழு பல்வேறு பரிந்துரைகளை பிசிசிஐ-க்கு வழங்கியுள்ளது.

கடந்த மாதம் இறுதியில் நடந்த பிசிசிஐ கூட்டத்தில், மாநிலத்திற்கு ஒரு வாக்குரிமை, 70 வயதிற்கு மேற்பட்டோர் நிர்வாகத்தில் பொறுப்பு வகிக்கத்தடை என்பன உள்ளிட்ட லோதா குழுவின் பரிந்துரைகளைத் தவிர்த்து, மற்ற பரிந்துரைகளை படிப்படியாக அமல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் இந்திய கிரிக்கெட்டில் சீர்திருத்தம் செய்வது தொடர்பான லோதா குழுவின் பரிந்துரைகளை நிபந்தனையின்றி பிசிசிஐ ஏற்குமாறும், அதுவரை மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி வ‌ழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் வரும் 17-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதிஉத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், லோதா குழுவின் பரிந்துரை தொடர்பான விவகாரத்தில் முக்கிய முடிவு எடுப்பதற்காக பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு வரும் 15-ஆம் தேதி கூடுகிறது. நிர்வாக சீர்திருத்தம் தொடர்பான லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு குறித்து இந்தக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close