[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

இந்தூர் டெஸ்ட்: 276 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்தியா

indvsnz-third-test-day-3-india-are-18-0-at-stumps-in-their-second-innings-lead-new-zealand-by-276

இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 299 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 557 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் வீராட் கோலி 211 ரன்களும், ரகானே 188 ரன்களும் குவித்தனர். இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது. இன்று முதல் இன்னிங்ஸை நியுசிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. சீரான வேகத்தில் ரன்கள் திரட்டி‌ய டாம் லாதம் 53 ‌ரன்களிலும், மார்ட்டின் கப்தில் 72 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

இதன்பின்னர் கேப்டன் கேன் வில்லிம்யம்சன், ராஸ் டெய்லர், லியுக் ராங்கி, வாட்லிங், சாண்ட்னர் ஆகிய முக்கிய வீரர்கள் குறுகிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். நியுசிலாந்து அணி 90.2 ஓவரில் 299 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 258 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு ஃபாலோ ஆன் வழங்காமல் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை உடனடியாக விளையாடியது.

தொடக்க வீரர் கவுதம் கம்பீர் 2 ரன் சேர்க்கும் வேகத்தில் கீழே விழுந்ததில் அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து 6 ரன்கள் எடுத்திருந்த அவர் காயம் காரணமாக வெளியேறினார். இந்திய அணி மூன்றாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 18ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close