[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

சென்னை சூப்பர்கிங்ஸ் அணி மீதான தடையை நீக்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

sc-reserves-order-on-petition-ban-on-csk

சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

சூதாட்ட புகார் தொடர்பாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் தடையை நீக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். தனிமனிதர்களின் தவறு காரணமாக ஒட்டுமொத்த அணிக்கும் தடை விதிப்பது சரியாகாது என்று சுப்ரமணியன் சுவாமி தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், சென்னை அணியைச் சேர்ந்த எந்த ஒரு வீரர் மீதும் சூதாட்ட புகார் எழுப்பப்படவில்லை என்றும் அவர் வாதிட்டார். இந்த வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close