[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு

இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட இன்று தொடக்கம்

ind-vs-nz-second-test-starts-today

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது.

உள்நாட்டில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டி இந்திய அணி பங்கேற்கும் 250 வது டெஸ்ட் போட்டியாகும்.3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், இந்திய அணி ஒன்றுக்கு - பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், தொடரை சமன் செய்யும் நோக்கில் நியுசிலாந்து அணியும் களமிறங்குகின்றன. கவுதம் கம்பீர், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளைத் தொடங்கும் போது மணி அடித்து போட்டி தொடங்குவது போன்ற சிறப்பு நிகழ்வினையும் இந்த போட்டியில் நடத்த பெங்கால் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. முன்னாள் கேப்டன் கபில்தேவ் மணியடித்து போட்டியை தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியின் முதல்நாளில் மாநிலம் முழுவதும் உள்ள 4,000 மாற்றுத் திறனாளி குழந்தைகள் போட்டியைக் கண்டுகளிக்க உள்ளனர். மேலும் இந்த போட்டி கடந்த 1965-க்குப் பிறகு ஈடன்கார்டன் மைதானத்தில் நியூசிலாந்து அணி விளையாடும் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close