[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

உள்நாட்டில் இந்திய அணியின் 250ஆவது டெஸ்ட்: கொண்டாட்டத்துக்குத் தயாராகும் ஈடன் கார்டன்

eden-gardens-gears-up-for-tryst-with-india-s-250th-test-at-home

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 4 வரை நடக்க இருக்கிறது.

இந்த போட்டி உள்நாட்டில் இந்திய அணி பங்கேற்கும் 250ஆவது டெஸ்ட் போட்டியாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த போட்டியை முன்னிட்டு, சிறப்பான கொண்டாட்டஙகளுக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் தயாராகி வருகிறது.

புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளைத் தொடங்கும் போது மணி அடித்து போட்டி தொடங்குவது போன்ற சிறப்பு நிகழ்வினையும் இந்த போட்டியில் நடத்த பெங்கால் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியின் முதல்நாளில் மாநிலம் முழுவதும் உள்ள 4,000 மாற்றுத் திறனாளி குழந்தைகள் போட்டியைக் கண்டுகளிக்க உள்ளனர். மேலும் இந்த போட்டி கடந்த 1965-க்குப் பிறகு ஈடன்கார்டன் மைதானத்தில் நியூசிலாந்து அணி விளையாடும் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

கான்பூரில் நடந்துவரும் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணியின் 500ஆவது டெஸ்ட் போட்டி என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close