[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி

erode-physically-challenged-person-basketball-competition

தமிழகத்தில் முதல்முறையாக ஈரோட்டில் மாற்றுதிறனாளிகள் பங்கேற்ற சற்கர நாற்காலி கூடைபந்து போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி வீரர்,வீராங்கனைகள் தங்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தால் பாராலிம்பிக்கில் தங்கம் வெல்லக் காத்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்தனர்.

சீறிப்பாயும் சக்கர நாற்காலிகள்.பந்தை விரட்டிப்பிடிக்கும் கரங்கள்.கூடைகளை மட்டுமே நோக்கிய கண்கள். மாற்றுத்திறனாளிகள் என்றால் வீட்டிற்கு சுமையாக முடங்கி கிடப்பவர்கள் அல்ல.விண்ணை முட்ட சாதிக்கத் துடிப்பவர்கள் என்பதை கண்முன் காட்டுகிறது இந்த மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகளின் கூடைப்பந்து மீதான ஆர்வமும் தன்னம்பிக்கையும்.உடலில் உள்ள ஊனம் உள்ளத்தில் இல்லை என்பதால் தான் இது போன்று தங்களால் விளையாட முடிவதாக பெருமிதத்துடன் கூறுகின்றனர் இவர்கள்.

என்ன தான் ஆர்வமும் தன்னம்பிக்கையும் வேரோடி இருந்தாலும் உலக அரங்கில் சாதிக்க துடிக்கும் தங்களுக்கு போதுமான பொருளாதார வசதிகள் இல்லை என்பதே இவர்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் உதவிக்கரம் நீட்டினால் பன்னாட்டு வாய்ப்புகளை வசப்படுத்தி இந்தியாவை பாராலிம்பிக் பதக்கப் பட்டியலில் பங்கெடுக்க வைப்போம் என்றும் உறுதியளிக்கின்றனர்.

ஈரோட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி போட்டிதான் தமிழ்நாட்டில் நடத்தப்படும் முதலாவது போட்டி என்ற வகையில் பெருமைப்படும் நேரத்தில் போதுமான அளவிற்கு இதை யாரும்‌ ஊக்குவிப்பத்தில்லை என்ற குற்றச்சாட்டும் முன்நிற்கிறது.போதிய வசதிகளை ஏற்படுத்தி அரசும், அரசு சாரா அமைப்புகளும் உதவ முன்வரும் பட்சத்தில் பல மாரியப்பன்களை உருவாக்க தமிழகம் தயாராகும் என்கிறார் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி கூடைப்பந்து சங்கத்தின் ஆலோசகர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close