[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

ஐ.பி.எல். கிரிக்கெட் : ஷேன் வாட்சன், பவன் நெஹி, யுவராஜ் சிங் அதிக தொகைக்கு ஏலம்

ipl-auction-2016-pawan-negi-yuvraj-singh-top-indian-buys-shane-watson-costliest-player

ஒன்பதாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன், இந்தியாவின் பவன் நெஹி, யுவராஜ் சிங் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

ஆல்வுரண்டர் ஷேன் வாட்சனை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒன்பதரை கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அதற்கு அடுத்தபடியாக இந்திய வீரர் பவன் நெஹியை, டெல்லி டேர்டெவில்ஸ் அணி எட்டரை கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 7 கோடி ரூபாய்க்கு யுவராஜ் சிங்கை ஏலத்தில் எடுத்தது. தென்னாப்ரிக்க வீரர் கிரிஸ் மோரிஸை 7 கோடி ரூபாய்க்கு டெல்லி அணியும்,மோகித் ஷர்மாவை ஆறரை கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியும் வாங்கின. அனுபவ வீரர் ஆசிஷ் நெஹ்ரா-வை ஐந்தரை கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் மிச்செல் மார்ஷ்-ஷை 4 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு புனே அணி ஏலம் எடுத்தது.

விக்கெட் கீப்பர் SANJU SAMSON-யை 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணியும், வேகப்பந்து வீச்ச‌ளர் இஷாந்த் ஷர்மாவை 3 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு புனே அணியும் ஏலம் எடுத்தன. இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோஸ் பட்லரை 3 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு மும்பை இண்டியன்ஸ் அணியும், கெவின் பீட்டர்சனை 3 கோடியே 50 லட்சம்‌ ரூபாய்க்கும் புனே அணியும் ஏலம் எடுத்தன.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆரோன் ஃபின்ச், மைக் ஹசி, ஜார்ஜ் பெய்லி, தென்னாப்ரிக்காவின் ஹசீம் ஆம்லா‌ , நியூசிலாந்தின்‌ மார்டின் கப்தில், இலங்கையின் ஜெயவர்த்தனே ஆகிய முன்னணி வீரர்களை எந்த அணியும் ‌ஏலம் எடுக்கவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close