[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2-ஆவது தங்கம்: ஈட்டி எறிதலில் ‌தேவேந்திர ஜஜாரியா புதிய உலக சாதனை

javelin-thrower-devendra-jhajharia-wins-gold-at-rio-paralympics

பிரேசிலில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில்‌ இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது.

ஈட்டி எறிதல் போட்டியின் எப்46 பிரிவில், இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா 63.97‌மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றுள்ளார். கடந்த 2004‌-ஆம் ஆண்டு பாராலிம்பிக்கில் 62.15 மீட்டர் தூரம் எறிந்து தாம் நிகழ்த்திய சாதனையை தற்போது அவர் முறியடித்து மீண்டும் ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அத்துடன், பாராலிம்பிக் போட்டியில் இரண்டாவது தங்கம் வென்ற ‌ஒரே இந்தியர் என்ற ‌சாதனையையையும் தேவேந்திர ஜஜாரியா பெற்றுள்ளார். ரியோ ‌பாராலிம்பிக் போட்டி உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் ஏற்கனவே தங்கம் வென்றுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு தங்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close