[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் யாருக்கு?...... ஜோகோவிச் - வாவ்ரிங்கா

us-open-tennis-djokovic-vs-wawrinka

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சும் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

அமெ‌ரிக்க ஓ‌பன் டெ‌‌ன்னிஸ்ஸில் நடப்புச் சாம்பியனான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், முதன்முறையாக இறுதிப் போட்‌டிக்கு முன்னேறியுள்ளார். இறுதிப்போ‌ட்டியில் அவர் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை எதிர்கொள்கிறார். இந்தத் தொடரில் ஜோகோவிச்சால் 3 ஆட்டங்களில் மட்டுமே முழுமையாக ஆட முடிந்தது.

முதல் சுற்றில் ஜோகோவிச், போலந்தின் ஜநோவிக் - ஐ வீழ்த்தினார். 2வது சுற்றில் செக் குடியரசு வீரர் ஜிரி வெஸ்லே பங்கேற்காததால், நேரடியாக 3வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்.

இதனையடுத்து, ரஷ்யாவின் மிக்ஹைல் எதிர்கொண்டார் ஜோகோவிச். ஆனால் இப்போட்டியில் யூஸ்னிக்கு காயம் ஏற்பட்டதால் அவர் பாதியில் விலகினா‌ர். இதனால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு எளிதில் முன்னேறினார் ஜோகோவிச்.

நான்காவது சுற்றில் பிரிட்டனின் கிலி எட்முண்ட-ஐ தோற்க‌டித்த அவ‌ருக்கு காலிறுதியிலும் அதிர்ஷ்டம் காத்திருந்தது. பிரான்ஸ் வீரர் ஜோ வில்ஃபி‌ரைட் சோங்கா காய‌த்தால் விலகியதால் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார். பிரான்சின் கைல் மொன்பில்ஸ்- ஐ வீழ்த்தி‌ய ஜோகோவிச் மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்‌‌குள் நுழைந்தா‌‌ர்.

ஜோகோவிச்சை எதிர்த்து விளையாடும் வாவ்ரிங்கா, முன்னணி ‌வீரர்க‌ள் வெர்டாஸ்கோ, அலெசாண்ட்ரோ கியானெஸ்ஸி, டேனியல் இவான்ஸ், இலியா, டெல் போட்ரோ, நிஷிகோரி ஆகியோ‌ரை வென்று இறுதிப் ‌போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஜோகோவிச்சும் வாவ்ரிங்காவும் இதுவரை 25 பே‌ட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதி‌ல் ஜோகோவிச் 21 போட்டிகளில் வென்றுள்ளார். கிரா‌ண்ட்ஸ்லாம் போட்டிகளை பொறுத்தவரை நோவாக் ஜோகோவிச் 5 முறையும் வாவ்ரிங்கா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

அரையிறுதியில் தோள்பட்டை வலியால் அவதிப்பட்ட ஜோகோவிச், இறுதிப் போட்டியில் வாவ்ரிங்காவை எதிர்கொள்வது சவால் நிறைந்ததாக இருக்கும் என்றே கரு‌தப்படு‌கிறது. அதே வேளையில் வாவ்ரிங்காவிற்கு எதிராக அதிக முறை வெற்றி பெற்ற அனுபவம் ஜோகோவிச்சிற்கு உதவும் என நம்பப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close