[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது

12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்

pm-modi-declares-12th-south-asian-games-open

12-ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கின. பிரதமர் நரேந்திர மோடி போட்டியை தொடங்கி வைத்தார். தெற்காசியாவில் பாயும் நதிகளை மையப்படுத்தி தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

போட்டியில் பங்கேற்கும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாள், பூட்டான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

அணிவகுப்பு நிகழ்சியைத் தொடர்ந்து, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தடகளம், பேட்மிண்டன், ஹாக்கி, கபடி உள்ளிட்ட 23 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் 2 ஆயிரத்தத 500 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

இந்தியா சார்பில் 521 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 12-ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் 16-ஆம் தேதி வரை கவுகாத்தி மற்றும் ஷில்லாங் நகரில் நடைபெறவுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close