[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

தோனி மீதான குற்றவியல் நடவடிக்கைகள் ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு

dhoni-to-take-criminal-action-against-the-ban-supreme-court

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியை கடவுள் போல சித்தரித்து பத்திரிகை ஒன்றில் அட்டைப்படம் வெளியான விவகாரத்தில், அவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு வர்த்தக மாத இதழ் ஒன்றில் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியை விஷ்ணு போல சித்தரித்து அடைடைப்படம் வடிவமைக்கப்பட்டிருந்தது. தோனிக்கு பல கைகள் இருப்பது போலவும், அதில் ஒரு கையில் காலணி ஏந்தி இருப்பது போல் அட்டைப்படத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

‘GOD OF BIG DEALS’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடப்பட்டது. இந்த விளம்பரம் இந்து கடவுளை அவமதிப்பது போல் இருப்பதாக சிவசேனா இந்துஸ்தான் அமைப்பை சேர்ந்த ராஜிந்தர் சிங் ராஜா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதன் தொடர்பாக ஆந்திர மாநிலம் அனந்தபூர் நீதிமன்றத்தில் தோனி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தோனி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் தோனி மீதான குற்றவியல் நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close