[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

ஒலிம்பிக் பதக்கத்தை ரஷ்ய வீரர் குடும்பமே வைத்துக் கொள்ளட்டும் யோகேஷ்வர் தத் நெகிழ்ச்சி

russian-player-family-keep-the-badge-yogeshwar-dutt

லண்டன் ஒலிம்பிக்கில் ரஷ்ய மல்யுத்த வீரர் பெசிக் குடுகோவ் வென்ற வெள்ளிப்பதக்கத்தை அவரது குடும்பத்தினரே வைத்துக்கொள்ளட்டும் என யோகேஷ்வர் தத் தெரிவித்துள்ளார்.

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்ய வீரர் குடுகோவ் கார்விபத்தில் உயிரிழந்து விட்ட நிலையில், அவரது குடும்பத்தினரிடமிருந்து அந்த பதக்கத்தை பெறுவது உகந்ததல்ல என்று யோகேஷ்வர் தத் தெரிவித்துள்ளார். ரஷ்ய வீரர் பெசிக் குடுகோவ் சிறந்த ஆற்றல் படைத்தவர் என்றும் யோகேஷ்வர் தத் ‌பாராட்டியுள்ளார்.

லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற ரஷ்ய வீரர் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, வெண்கலப்பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத் வெள்ளிப்பதக்கம் பெற்றவராக அறிவிக்கப்பட்டது. இதனிடையே யோகேஷ்வர் தத்திடம் நடத்தப்பட்ட சோதனை முடிவுகளை உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை வெளியிட்ட பின்னரே அவருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்குவது உறுதிசெய்யப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close