[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

லோதாக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்து பிசிசிஐ பதிலளிக்க உத்தரவு

sc-asks-bcci-to-fall-in-line-with-lodha-panel-recommendations

லோதாக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்து பிசிசிஐ அமைப்பு அடுத்த நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பீகார் கிரிக்கெட் சங்கம் தொடர்ந்த வ‌ழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகிள் லோதா குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப பிசிசிஐ அமைப்பிற்குள் மாற்றம் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதுகுறித்து பிசிசிஐ அமைப்பு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்காவிட்டால், உச்சநீதிமன்றமே குழு‌ அமைத்து லோதாக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஐபிஎல் சூதாட்ட புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்திய லோதாக் குழு பிசிசிஐ அமைப்பின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close