[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

கண்ட கனவை நினைவாக்குவோம் !

for-successful-life

கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல... உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு... என்றார் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்...

இவ்வுலகில் மனிதர்களாக பிறந்த நாம் அனைவரும் தினந்தோறும் எண்ணற்ற கனவு கண்டு கொண்டு தான் இருக்கிறோம். சைக்கிளில் செல்கின்றவருக்கு காரில் செல்வது போன்ற கனவு.. காரில் செல்பவருக்கு சொந்த விமானத்தில் செல்வது போன்ற கனவு... என எந்த வரையறையும் இல்லாமல் எண்ணற்ற கனவுகள் காண்கின்றோம்..

ஆனால் இத்தகைய கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பதாக மட்டுமே இருக்க கூடாது என்பதை தான் சொன்னார் அப்துல் கலாம் அவர்கள். ஆம் நாம் கண்ட கனவை, நாம் என்னவாக இந்த பூமியில் ஜொலிக்க வேண்டும் என தினம் தினம் விரும்புகிறோமோ அதற்கான முயற்சியை நாள்தோறும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் நாம் காணும் கனவுகள் நம்மை தூங்க விடாமல், நமது சிந்தனையையும், செயலையும் ஒவ்வொரு முறையும் எழுப்பிவிடும்படி இருக்க வேண்டும்.

வாழ்க்கையை மேம்படுத்த இன்னும் பல கனவுகள் காண்போம். கண்ட கனவை நினைவாக்க முயற்சி எடுப்போம். இனிய காலைப் பொழுதை உற்சாகமாக தொடக்கி, வாழ்க்கையை வெற்றியாக்குவோம்..

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close