[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

வரலாற்றில் இன்று: சிங்கப்பூர் விடுதலை நாள்

singapore-independence-day-august-09

மலேசியத் தீபகற்பத்தின் தென்முனையில் அமைந்துள்ள நாடு சிங்கப்பூர். ஐரோப்பாவை தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைக்கும் முக்கியமான துறைமுகம் சிங்கப்பூர்.

ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த மற்ற நாடுகள் விடுதலை அடைந்ததைப் போலவே மலேசியாவுடன் சிங்கப்பூரும் விடுதலையடைந்தது. எனினும் மலேசியக் குடியரசில் ஒரு மாநிலமாகவே சிங்கப்பூர் இருந்து வந்தது. 1963-இல் இந்தோனேசியா படையெடுத்த போது வலிமையான கூட்டணியில் இருந்தாலும் மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமானுக்கும், லீ குவான் யூ தலைமையிலான மாநில அரசுக்கும் முரண்பாடு வளர்ந்துகொண்டே இருந்தது. இனி ஒன்றுபட்டு இருக்க முடியாது; பிரிவினை தவிர்க்க முடியாதது என்ற நிலை உருவானது.

1959-இல் நடைபெற்ற தேர்தலில் லீ குவான் யூ கட்சி வெற்றிபெற்று லீ பிரதமரானார். சிங்கப்பூர் மலேசியக் கூட்டணியிலிருந்து விலகியதும் சிங்கப்பூர் தனித்து வாழமுடியாது; மனித வளம் மட்டுமே உள்ளது... மண் வளம் ஏதுமில்லை என்று உலகமே கூறியது. மனித வளத்தினை மட்டுமே கொண்டு சிங்கப்பூரை வாழ வைக்க முடியும் என நிரூபித்த பெருமைக்குரியவர் லீ குவான் யூ. 1965 ஆகஸ்ட் 9 முதல் சிங்கப்பூர் சுதந்திர ஜனநாயக இறையாண்மை நாடாக விளங்கும் என அறிவித்தார் லீ. உலக நாடுகள் அவையிலும் காமன்வெல்த் நாடுகள் அவையிலும் உறுப்பு நாடாக விளங்குகிறது.

சிங்கப்பூர் நல்ல நாகரிகத்தினைக் கொண்ட மக்களைக் கொண்ட நாடு. நடைபாதையில் வசிப்பவர்களோ, பிச்சைக்காரர்களோ கிடையாது. சாலைகளில் மேடு பள்ளங்களையோ, குப்பைக் கூளங்களையோ பார்க்க முடியாது. கழிவுநீர் தேங்கும் பிரச்சினையும் இல்லை. தண்ணீர், மின்சாரத் தட்டுப்பாடு என்பது எப்போதுமில்லை. மலேசியாவில் இருந்துதான் தண்ணீரைக் கொண்டு வருகிறார்கள். எந்தச் சிக்கலை வைத்தும் தண்ணீர் தர மறுப்பதில்லை மலேசியா. நடிகர்கள், திரைப்படங்கள் உண்டு. ஆனால், விளம்பரத் தட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close