[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

உங்களை பற்றி உங்களுக்கே தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்..

truths-you-can-t-deny

வாழ்க்கையை சில பேர் ரசித்து ரசித்து வாழ்கிறார்கள். சில பேரோ எப்படி நாட்களை தள்ளுவது என யோசிக்கிறார்கள்.. எவ்வாறாயினும் பிறந்தால் வளர்ந்து தானே ஆக வேண்டும். அதனைப்போல் ஒவ்வொரு நாளிலும் எண்ணற்ற விஷயங்களை சந்திக்க வேண்டிவரும். அவைகள் நமக்கு மகிழ்ச்சி தருபவையாக இருக்கலாம். இல்லாவிடில்நமது மகிழ்ச்சியை கெடுக்க கூடியவையாக இருக்கலாம். ஆனால் அவற்றை எல்லாம் அனுபவித்து, கஷ்டம் என்றால் அதிலிருந்து மீண்டு வருவது தான் மனித வாழ்க்கையின் பெரிய சவால்..

வாழ்க்கையில் நாம் தினம் தினம் கடந்து வரும் ஆனால் பெரியளவில் கண்டுகொள்ளாத சில விஷயங்கள்.. உங்களுக்காக...

இந்த உலகில் நமக்கெல்லாம் பாதுகாப்பான இடம் எது தெரியுமா? கோட்டை போன்ற மதில்களும், மாளிகை போன்ற வீடுகளும் அல்ல.. நம்மை ஈன்றெடுத்த தாயின் மடி தான் நம் அனைவருக்கும் மிகவும் பாதுகாப்பான இடம்.. உங்களுக்கு எதாவது பிரச்னை என்றால் அம்மா மடியில் தலை வைத்து சிறிது நேரம் படுத்திருங்கள். உங்கள் கவலைகள் எல்லாம் பறந்து உங்களுக்கே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்

இந்த உலகில் நாள் ஒன்றுக்கு எத்தனையோ குழந்தைகள் பிறக்கிறார்கள். அதனைபோல் பெரியவர்களும் இறக்கிறார்கள்.. நாள் ஒன்றுக்கு இவ்வுலகில் 1,59,635 பேர் மரணம் அடைவது உங்களுக்குத் தெரியுமா? இறைவன் படைப்பில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பு என்ற ஒன்று வந்தே தீரும். ஆகவே மரணத்தை கண்டு நாம் ஒருநாளும் அஞ்சவே கூடாது.

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் மனிதர்கள் மனம்விட்டு பேசிக்கொள்வது குறைந்து விட்டது. ஆனால் உங்களுக்குத் தெரியுமா..? பின்னிரவு நேரங்களில் அனுப்பப்படும் டெக்ஸ்ட் மெசேஜ்களில் பெரும்பாலோனோர் உணர்வுப்பூர்வமாக பேசிக்கொள்கிறார்கள். மேலும் இந்த நேரங்களில் அவர்கள் செய்த சில விஷயங்களையும் ஒப்புக்கொள்கிறார்கள்..

நீங்கள் ஒருவர் மீது நட்புடன் இருக்கீர்கள். பின் ஒருநாள் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட இருவரும் பிரிந்துவிடுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அவ்வாறு பிரிந்தவர்கள் தொடர்ச்சியாக 7 வருடங்களாக பேசுவற்கு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனில் ஆயுள் முழுவதும் உங்களது நட்பு தொடராது என உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே யாருடனாவது சண்டை போட்டிருந்தால் முதலில் நாமாக முன்வந்து பேசிவிடுவாமே.. என்ன குறைந்து போகிறது..

உங்களுக்கு பிடித்த ஒருவரை தொடர்ச்சியாக 20 செகண்ட்டுகள் நீங்கள் இறுக்கமாக கட்டித் தழுவும் போது வெளியேறும் ஆக்ஸிடாசின், அவர் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்துமாம்.

இந்தியாவில் நடைபெறும் 100 திருமணங்களில் ஒரு திருமணம் விவகாரத்தில் முடிகிறது. வேதனைக்குரிய விஷயம் தான். ஆனால் உலகளவில் மிக குறைவாக விவகாரத்து நடைபெறும் நாடுகளில் இந்தியா இடம்பெற்றுள்ளது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிகச் சிறந்த நபராக யாரை கருதுகிறீர்கள் என உங்களுக்குத் தெரியுமா? இந்த வாக்கியத்தை படித்துமுடித்தவுடன் உங்கள் மனதில் யாரோ ஒருவர் சட்டென்று தோன்றுகிறார்கள் அல்லவா.. அவரைத் தான் நீங்கள் மிகவும் ஆழமாக நேசிக்கிறீர்கள்.. அத்துடன் மிகச் சிறந்த நபராகவும் கருதுகிறீர்கள்..

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close