[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

மில்லியனராக மாறிய நோபல் பரிசு வென்ற மலாலா...

nobel-laureate-malala-yousafzai-is-a-millionaire-now-and-this-is-how-she-spends-her-millions

உலகின் மிகப்பிரபலமான டீன் ஏஜ் பெண் மலாலா யூசப்ஜாய் கடந்த 12ம் தேதி தனது 19வது பிறந்த நாளை கொண்டாடினார். பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்தார். இதன் காரணமாக அங்குள்ள தாலிபன் தீவிரவாதியால் தாக்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லண்டனில் உயர்சிசிக்சை பெற்ற மலாலாவிற்கு உலகம் முழுவதும் பலரும் அவரது கல்விச் செலவை ஏற்க முன்வந்தனர்.

தற்போது மலாலா தனது குடும்பத்தினருடன் பிரட்டனின் பிர்மிங்காமில் வசித்து வருகிறார். நோபல் பரிசு வென்ற மலாலா, ஐ எம் மலாலா என்ற பெயரில் புத்தம் வெளியிட்டார். அது பெரும் அளவு விற்பனையானதால் பணம் குவிந்தது. மேலும் தாலிபன் தாக்குதலால் பாதிக்கப்பட்டது குறித்து பிபிசி உருதுவில் அவரது பிளாக்கின் வழியாகவும் பணம் குவிந்தது.

2014ம் ஆண்டு ந்திய குழந்தைகளின் நலனுக்காக பாடுபாட்ட கைலாஷ் சத்யார்த்தியுடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசை மலாலா பெற்றார்.

உலகின் மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற மலாலா, உலகின் பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி மலாலா மில்லியனரியாக மாறியுள்ளார்.

ஐ எம் மலாலா புத்தகம் வெளியிட்ட சலார்ஜாய் நிறுவனம் மலலாவின் வங்கி கணக்கில் 2.2 மில்லியன் ஈரோவை(இந்திய மதிப்பில் ரூ.16,34,87,788) கடந்த ஆகஸ்ட் 2015ம் ஆண்டு செலுத்தியது.

ஐ எம் மலாலா புத்தகம் 1.8மில்லியன் காபிக்கு மேல் அதிகமாக விற்பனையாகியது. இந்நிலையில் தனது ஒவ்வொரு சொற்பொழிவுக்கும், 114000 யூரோ பணம் வாங்குகிறார்.

கடந்த 2014ம் ஆண்டு மலாலா 50000 டாலர் பணத்தை காசாவில் பள்ளிகளின் மறுசீரமைப்புக்கு நன்கொடையாக வழங்கினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close