[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

அதிக உடல் எடையால் திடீர் மரணம்: பெண்களைவிட ஆண்களுக்கு 3 மடங்கு அதிகமாம்

obesity-is-three-times-as-deadly-for-men-than-women

அதிக உடல் எடை காரணமாக திடீரென மரணம் ஏற்படும் வாய்ப்பு பெண்களைவிட ஆண்களுக்கு 3 மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடலின் எடை சராசரியாக இருக்கும் வரையில் எந்த பிரச்னையும் எழுவதில்லை. ஆனால் அதையும் தாண்டி உடல் எடை, அதிகரிக்க, அதிகரிக்க பக்க விளைவுகளும் அதிகரிக்கும். எனவே உடல் எடையை குறைக்க மருத்துவ ரீதியாக பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகின்றன. அதேநேரம் மிக அதிகப்படியாக உடல் பருமனாக இருந்தால், எடையை குறைப்பது கடினமாகிவிடுகிறது.

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் தொடர்பாக லான்செட் மருத்துவ இதழில் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது, உலகம் முழுவதும் 40 மக்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவில் அதிக உடல் பருமான மக்கள் சாதாரண எடையில் உள்ளவர்களைவிட மூன்று வருடங்கள் முன்னதாகாவே உயிரிழ்ந்து விடுவதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் ;வயது முதிர்ச்சிக்கு முன்பே அகால மரணம் ஏற்பட அதிக உடல் எடை காரணமாக அமைகிறது என்றும், இந்த ஆபத்து பெண்களைவிட ஆண்களுக்கு மூன்று மடங்கு அதிகம் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதிகப்படியான எடையுள்ள மக்கள் தங்கள் ஆயுட் காலத்தில் 10 வருடங்களை இழப்பதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள், பக்கவாதம், புற்றுநோய் உள்ளிட்டவை அதிக உடல் எடை உள்ளவர்களை தாக்கும் ஆபத்து அதிகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement:
Related Tags : Obesity
Advertisement:
Advertisement:
[X] Close