[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
  • BREAKING-NEWS தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரோகித் சர்மா அசத்தல் சதம். போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது முதல்நாள் ஆட்டம்
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

கோட்சே சுட்டது மூன்று குண்டுகள்.. காந்தியின் உடம்பில் இருந்ததோ 4 குண்டுகள்? 

nathuram-godse-assassinated-mahatma-gandhi

காந்தி மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறார். நாதுராம் கோட்சே அவரைக் கொலை செய்து 70 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டன. இந்தியா இப்போது காந்தியின் 150-வது ஆண்டு கொண்டாட்டத்தில் மூழ்கி இருக்கிறது. அவரைப் பற்றி பல பல்கலைக்கழகங்கள் கருத்தரங்குகள் நடத்தி வருகின்றன. உலக நாடுகளில் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த வரலாற்று முக்கியமான காலத்தில்தான் கமல்ஹாசன் அரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையின் மூலம் விவாதத்தை கிளப்பி இருக்கிறார். 

அவர் காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு, “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’’ எனக் கூறியிருக்கிறார். இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விவேக் ஓப்ராய் தொடங்கி பிரதமர் நரேந்திர மோடி வரை எல்லோரும் பேசிவிட்டனர்.    

   

நாதுராம் கோட்சே ஒரு இந்து என்றால் காந்தி என்ன மதத்தை சார்ந்தவர் என்பது முக்கியம். தன் வாழ்நாள் முழுக்க ராமபிரானை தெய்வமாக தொழுதவர் காந்தி. தன்னை சுத்தமான இந்துவாகவே அவர் பிரகடனப்படுத்திக் கொண்டார். மாற்று மதத்தின் மீது அன்பு காட்டினாலும் பகவத் கீதை மீதே அவர் கவனம் செலுத்தினார். ‘ராம ராஜ்யம்’ என்பதுதான் அவர் கண்ட கனவு. அதை கட்டி எழுப்ப தன் வாழ்க்கை முழுவதும் செலவிட அவர் தயாராக இருந்தார். தன்னை நாதுராம் சுட்டுக் கொன்றதும், தன் உடலில் தாங்கிய குண்டுகளோடு அவர் தரையில் சரிந்தபோது அவர் இறுதியாக உச்சரித்த வார்த்தை ‘ஹே ராம்’. இந்த வார்த்தையை அவர் உபயோகிக்கவில்லை என்றும், இல்லை சொன்னார் என்றும் வாதங்கள் பல காலம் நீடித்தன. 

இதில் விநோதம் என்னவென்றால் காந்தியை சிலர் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்பது காந்திக்கே தெரியும். 1934 தொடங்கி 1948 வரை காந்தியைக் கொல்ல பல கட்ட முயற்சிகள் நடந்தன. அதில் 1948 ஜனவரி மாதம் 20 தேதி நடந்த கொலை முயற்சி நேரடியாக தோல்வியில் முடிந்தது. இந்த முயற்சியில் காந்தி வழக்கம் போல் பிர்லா மாளிகைக்கு பிரார்த்தனை செய்ய வந்தார். முதல் நாள் அவர் உண்ணா நோன்பு இருந்ததால் மிகுந்த உடற்சோர்வில் காணப்பட்டார். 

ஆகவே அவரை நாற்காலியில் அமர்த்தி பொதி மூட்டைப் போல் சிலர் சுமந்து வந்தனர். அப்போது திட்டத்தின் படி நாதுராம் கோட்சே, கோபால் கேட்சே, நாராயண ஆப்தே, விஷ்ணு கார்கரே, மதன்லால் என ஐந்து பேர் அவரைச் சுட்டுக் கொல்ல காத்திருந்தனர். காந்திக்குப் பின்னால் இருந்த அறையில் கோபால் துப்பாக்கியுடன் காத்திருந்தார். சுடுவதற்கு சரியான தருணம் என்பதை உணர்த்தும் வகையில் மக்கள் கூட்டத்தோடு ஒன்றி நின்ற நாதுராம் கன்னத்தை சொரிந்தார். அதனைப் பார்த்த நாராயணன் இரு கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தார். அதை கவனித்த மதன்லால் அங்குள்ள மதில் சுவர் மேல் கையெறி குண்டை வீசினார். மக்கள் சிதறி ஓடினர். ஜன்னல் வழியே துப்பாக்கியோடு நின்ற கோபாலுக்கு சரியான உயரத்தில் நின்று சுட முடியாமல் போனதால் இந்த முதல் திட்டம் தோல்வியை தழுவியது. 

அதையொட்டி அப்போதே கையெறி குண்டு வீசிய மதன்லால் கைது செய்ப்பட்டடார். விசாரணையில் அவர் அப்ரூவர் ஆனார். திட்டத்தை அரசுக்கு காட்டிக் கொடுத்தார். ஆனாலும் அரசு காந்தியை காப்பாற்றவில்லை. சரியாக இந்தச் சம்பவம் நடந்து முடிந்த 10 நாளில் காந்தி மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. அதில் அவர் மிக எளிமையாக கொல்லப்பட்டார்.  

நாதுராம் கோட்சே பயன்படுத்தியது 9mm proton automatic gun. இந்தத் துப்பாக்கி விலை உயர்ந்தது. சாதாரண தையற்கடைக்காரர் நாதுராமுக்கு எப்படி இதை வாங்கும் சக்தி கிடைத்தது எனப் பலரும் விவாதித்தனர். இதில் மொத்தம் 7 புல்லட் இருந்தன. அதில் 3 புல்லட்டை அவர் காந்திக்காக செலவழித்தார். மீதம் இருந்த 4 புல்லட்டை காவல்துறை கைப்பற்றியது. ஆனால் காந்தியின் உடம்பில் ஏறி இருந்ததோ மொத்தம் 4 புல்லட். ஒரு புல்லர் எங்கிருந்து சுடப்பட்டது என்பது குறித்து சர்ச்சை எழுந்தது. கடந்த வருடன் 2018ல் கூட பங்கஜ் என்ற மும்பை ஆய்வாளர் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகூட போட்டார். அது விசாரணைக்கும் வந்தது. 

நாதுராம் காந்தியை கொலை செய்த பின், டெல்லி செங்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கினார். மொத்தம் ஐந்து மணிநேரம் நின்று கொண்டு அவர் பேசினார். மொத்தம் 92 பக்கம் அவரது வாக்குமூலம் பதிவானது. நாதுராம் காந்தியைக் கொன்றதற்கு கூறிய காரணம்,  ஜின்னாவின் வாதங்களுக்கு முன்னால் காந்தி தோற்று போனார். இவர் உயிரோடு இருந்தால் இந்தியாவிற்கு துன்பம் அதிகமாகும் என்றார். நவகாளி சம்பவங்கள் போது காந்தியின் நிலைப்பாட்டை அவர் விமர்சித்தார். 

1947ல் இந்தியா சுதந்திர கோலம் பூண்ட போது நிகழ்ந்த பஞ்சாப் கலவரம் தன் மனதை உலுக்கியது என்றார். ‘காந்தியின் கொள்கைகளை ஏற்று நாட்டிற்கு நன்மை செய்ய காந்திக்கு செருப்பாக இருக்க வேண்டும் என்றே அவருடன் சேர்ந்தேன்’ என்றவர்தான் காந்தியை ரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தார் என்கிறது வரலாறு. 

“காந்தியை கொன்றால் என் உயிரும்போகும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய் போவது உறுதி” என்றும் நாதுராம் கேட்சே நீதிமன்றத்தில் வாதாடினார். மேலும் தன்னை இந்து என்றும் பிராமண வகுப்பைச் சார்ந்தவன் என்றும் அவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். 

அதற்குப் பின்னால் சில காரணங்கள் உண்டு. காந்தியை கொலை செய்யும் போது நாதுராமை முஸ்லிம் வேடத்தில் செல்லும்படி நாராண ஆப்தே அறிவுறுத்தியதாக சொல்லப்பட்டது. அதற்கு அவர் உடனே மறுத்தாக சில வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.  ஏன் அதை கோட்சே ஏற்கவில்லை?  பெண் வேடம் இட அவர் தயாராக இல்லை. சிறுவயது முதலே நாதுராம், தன் பெற்றோர்களால் பெண் பிள்ளையை போல வளர்க்கப்பட்டார் என்கிறது அவரைப்பற்றி எழுப்பட்டுள்ள நூல்கள். 

இவருக்கு முன்னாள் பிறந்த குழந்தைகள் தொடர்ந்து இறந்து போகவே கோட்சேவை பெண் பிள்ளை கோலத்தில் அவரது பெற்றோர் வளர்த்து வந்தனர். ஆண் மகனான கோட்சேவுக்கு அது பிடிக்கவில்லை. தன் குணத்தை அவர் உலகிற்கு காட்ட முயற்சித்தார். பெற்றோர்கள் அவருக்கு வைத்த பெயர் ராமச்சந்திர விநாயக் கோட்சே. மரணத்தில் இருந்து அவரைக் காக்க அவர் மூக்கில் பெற்றோர் மூக்குத்தி அணிவித்தனர். அவருடன் படித்த மாணவர்கள் அவரை ‘நாது’ ராம் கோட்சே என்றனர். ‘நாது’ என்றால் மூக்குத்தி. ஆக, மூக்குத்தி மீது இருந்த வெறுப்பும் தன்னை ஆணாக அடையாள காட்ட வேண்டும் என்ற துடிப்பும் கோட்சேவை முஸ்லிம் பெண் வேடம் போடவிடாமல் தடுத்தது என்கிறது அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகம். இவர் உளவியல்பூர்வமாக எடுத்த முடிவு இந்தியாவில் பெரும் கலவரத்தை வரவிடாமல் தடுத்து நிறுத்தியது என்பது எவ்வளவு பெரிய உண்மை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close