[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள அரசு வழங்கும் நீரை தமிழக அரசு ஏற்க மறுத்ததாக வந்த தகவலில் உண்மையில்லை - அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

“அம்பத்தி ராயுடு, ரிஷப், யுவராஜ்....” - கேதர் ஜாதவுக்கு பதில் யாருக்கு வாய்ப்பு?

replacement-for-kedar-jadav-in-world-cup-cricket

உலகக் கோப்பை அணியில் காயம் காரணமாக கேதர் ஜாதவ் விளையாடவில்லை எனில், அவருக்குப் பதில் யாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்பது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.

உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த கேதர் ஜாதவ், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது காயம் ஏற்பட்டது. அதனால், ஐபிஎல் தொடரில் கடைசி சில போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அவருக்கு காயம் எப்படி குணமாகிறது என்பது பொறுத்து, அவருக்குப் பதில் யாரை தேர்வு செய்வது என்பது முடிவு செய்யப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், ஒருவேளை கேதர் ஜாதவ் விளையாடவில்லை என்றால் அவருக்குப் பதில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி இப்பொழுது இருந்தே நிலவி வருகிறது. இந்தப் பேச்சு அதிகம் அடிபடுவது அம்பத்தி ராயுடு, ரிஷப் பண்ட் பெயர்தான். விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, முகமது சமி ஆகிய 15 கொண்ட அணியை சில வாரங்களுக்கு முன்பு பிசிசிஐ அறிவித்தது. 

அணி அறிவிக்கப்பட பொழுதே, விஜய் சங்கருக்கு பதில் அம்பத்தி ராயுடுவை எடுக்காததற்கும், ரிஷப் பண்ட்டை எடுக்காதது குறித்தும் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். பேட்டிங் சராசரி நன்றாக உள்ள அம்பத்தி ராயுடுவை எடுக்கவில்லை என்ற ஐசிசி கூட அதிர்ச்சியை வெளியிட்டு இருந்தது. விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டது குறித்து அம்பத்தி ராயுடு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக ஒரு பதிவினை போட்டிருந்தார்.

அதேபோல், ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படாதது குறித்தும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். ஒரு கீப்பராக அல்லாமல் பேட்ஸ்மேன் என்ற வகையிலாவது ரிஷப் பண்டினை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று சிலர் கூறியிருந்தனர். தன்னை எடுக்காதது தவறு என்பதை உணர்த்தும் வகையில் ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி ரிஷப் பண்ட் ரன்களை சேர்த்திருந்தார்.

இந்திய அணியை பொறுத்தவரை, சுப்மன் கில், நிதின் ரானா, மணிஷ் பாண்டே, சூர்ய குமார் யாதவ், கலீல் அகமது, தீபக் சாஹர், சஞ்சு சாம்சன், குர்னல் பாண்ட்யா என ஒரு பெரிய பாட்டாளமே வாய்ப்பு கிடைக்குமா எனக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், அம்பத்தி ராயுடு, ரிஷப் பண்ட் இருவரது பெயர் தான் கேதர் ஜாதவுக்கு பதில் அடிபடுகிறது. 

அதேபோல், யுவராஜ் சிங் ரசிகர்கள் பலரும் இந்த உலகக் கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று உருக்கமாக வலியுறுத்தி வருகின்றனர். கேதர் ஜாதவுக்கு எப்படி குணமாகிறது என்பதை பொறுத்துதான் இந்த வாய்ப்பு யாருக்கு என்பது முடிவாகும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close