[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளி ! கால்பந்தில் சாதிக்கும் மாணவிகளின் கதை 

the-story-about-school-girls-achieve-in-football-without-a-playground-in-thiruvarur

விளையாட்டு மைதானம் இல்லாமல் வயல், தரிசு நிலங்களில் விளையாடி தமிழக கால்பந்து அணியின் தலைவராக பொறுப்பேற்று சாதனை படைத்து வருகிறார் அரசு பள்ளி மாணவி ஒருவர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் என்ற ஊரில் அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நாலநல்லூர், ராமாபுரம், குடிதாங்கிசேரி, கோரையாறு உள்ளிட்ட கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் மட்டுமே படிக்கும் இந்த பள்ளியில், தற்போது தேசிய அளவில் கால்பந்தாட்ட போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் சாதித்து வருகின்றனர்.

550 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளிக்கு என விளையாட்டு மைதானமும் கிடையாது, நிரந்தரமான உடற்பயிற்சி ஆசிரியரும் கிடையாது. இந்தச் சூழலில் கால்பந்தாட்ட போட்டியில் தனிக்கவனம் செலுத்தி மகாராஷ்டிரா, ஜார்கண்ட், டெல்லி, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விளையாடி பரிசுகளை குவித்து வருகின்றனர். பள்ளியின் அருகே உள்ள தரிசு நிலங்களிலும், வயல்பகுதிகளும் விளையாடி பயிற்சி பெற்று பல தடைகளை தாண்டி இப்பள்ளி மாணவர்கள் விளையாட்டில் பல ஆண்டுகளாக சாதித்து வருகின்றனர். 

இந்தப் பள்ளி மாணவர்கள் தமிழக கல்பந்தாட்ட அணியிலும் இடம் பெற்று சிறப்பாக விளையாடி வருகின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு பிரியதர்ஷினி என்ற மாணவி தமிழக அணியில் விளையாடி வெங்கலப்பதக்கம் பெற்றார். அந்த மாணவி தமிழக கால்பந்து அணியின் அணித்தலைவராக பொறுப்பேற்று  செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவிகள் பலரும் பள்ளியில் பெற்ற பயிற்சியை தொடர்ந்து பல்கலைக்கழக அணிகளிலும் விளையாடி வருகின்றனர்.

கிராமப்புறங்களில் பயிலும் இந்த மாணவர்களுக்கு கால்பந்தாட்ட உபகரணங்களை யாரேனும் வாங்கி கொடுத்தால் மட்டுமே அவர்களால் போட்டிகளில் விளையாட முடியும் என்ற சூழல் உள்ளது. இருப்பினும் விடாமுயற்சியுடன் இந்த பள்ளி மாணவிகள் பலரும் கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடி தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டி வருகின்றனர். முழுவதும் பின்தங்கிய நிலையில் உள்ள இந்த பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு துறை மூலம் கூடுதல் வசதியை செய்து கொடுத்தால் எதிர்காலத்தில் விளையாட்டின் மூலம் நமது பெருமையை நிலைக்கச் செய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அரசும் இதனை பரிசிலனை செய்யும் என நம்பிக்கையுடன் இப்பள்ளி மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

தகவல்கள் : கு.ராஜசேகர்- செய்தியாளர்- திருவாரூர் 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close