[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

நெல்லை சீமையிலிருந்து கிளம்பிய தமிழக புயல் - யார் இந்த விஜய் சங்கர் 

vijay-shankar-holds-his-nerve-to-stake-world-cup-claim

தமிழக வீரரான விஜய் சங்கர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அட்டகாசமாக விளையாடி அசத்தியுள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற பலரும் காரணமாக இருந்தார்கள். இருப்பினும், தமிழக வீரரான விஜய்சங்கர் அதில் முன்னிலையில் இருக்கிறார் என்றே சொல்லலாம். யாருமே எதிர்பார்க்காத வகையில் கடைசி ஓவரை அற்புதமாக வீசி, ஆஸ்திரேலியாவிடம் இருந்து வெற்றிய பறித்துவிட்டார். இந்தப் போட்டிதான் அவரின் திறமையை இதுவரை இல்லாத அளவிற்கு வெளிக் கொண்டு வந்துள்ளது. தனக்கான வாய்ப்பை அவர் மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டார். இனி, ஆல்ரவுண்டர்களுக்கான போட்டியில் நிச்சயம் விஜய் சங்கர் இடம்பெறுவார்.

            

யார் இந்த விஜய்சங்கர்?

ஆல் ரவுண்டரான விஜய்சங்கர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை சங்கர் கிளப் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர். அதேபோல், அவரது சகோதரர் அஜய் சங்கர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். மொத்தத்தில் அவருடையது ஒரு கிரிக்கெட் குடும்பம்.

1991ம் ஆண்டு ஜனவரி 26 பிறந்தவர் விஜய்சங்கர். வயது 28. இளம் வயதிலேயே திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு இவரது குடும்பம் மாறிவிட்டது. சென்னை நங்கநல்லூரில் உள்ள மார்டன் சீனியர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதேபோல், குருநானக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

                

கிரிக்கெட் வாழ்க்கை

விஜய்சங்கர் ஆஃப் ஸ்பின்னராகத் தான் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியுள்ளார். தமிழக அணியில் ஏராளமான சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்ததால், வேகப்பந்து வீச்சாளராக மாற்றிக் கொண்டார். தொடர்ச்சியாக போராடி, தன்னுடைய விடா முயற்சியால் தமிழக அணியில் இடம்பிடித்தார்.

             

பெங்களூரில் 2012ம் ஆண்டு நடைபெற்ற ஆந்திராவுக்கு எதிரான லிஸ்ட் ஏ போட்டியில் விஜய்சங்கர் அறிமுகமானார். அதேபோல், முதல்தரப் போட்டியைப் பொறுத்தவரை நாக்பூரில் 2012-13 ஆண்டில் நடைபெற்ற விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். 

காத்திருக்க வைத்த ஐபிஎல் போட்டி?

ஐபில் போட்டிகளை பொறுத்தவரை 2013ம் ஆண்டே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் தேர்வானார். ஆனால், மூன்று வருடங்கள் அவரை தொடர்ந்து தக்க வைத்த சிஎஸ்கே, ஒரே ஒரு வாய்ப்பு மட்டும்தான் கொடுத்தது. 2014-15 ரஞ்சி டிராபி தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 577 ரன்கள் குவித்தார். அதில், இரண்டு சதம், மூன்று அரைசதம் அடங்கும்.

            

இதனையடுத்து, 2016 ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி விஜய்சங்கரை ஏலம் எடுத்தது. இருப்பினும், அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. பின்னர், அதே அணிக்காக 2017இல் விளையாடிய அவர், குஜராத் அணிக்கு எதிராக அற்புதமான அரைசதம் ஒன்றினை அடித்து இருந்தார். 

அற்புதமாக விளையாடிய போது ஐதராபாத் அணி 2018ல் அவரை ஏலம் எடுக்கவில்லை. சென்ற வருடம் டெல்லி டேர்டெவில்ஸ் அணி அவரை எடுத்துக் கொண்டது. தற்போது, ஐதராபாத் அணி விஜய்சங்கரை மீண்டும் ஏலம் எடுத்துள்ளது. 

               

சர்வதேச போட்டிகளில் கால்பதித்த விஜய்சங்கர்

2017ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் அணியில் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக விஜய்சங்கர் இடம்பெற்றார். இருப்பினும், அவர் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இலங்கையில் நடைபெற்ற நிதஹாஷ் டிராபி டி20 தொடரில் தான் முதன் முதலாக விஜய் சங்கர் அறிமுகமானார். அந்தத் தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட் மற்றும் 32 ரன்கள் எடுத்ததற்காக முதல் ஆட்டநாயகானாக தேர்வு செய்யப்பட்டார். 

            

ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்ட்யா நீக்கப்பட்ட பிறகு அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் களமிறக்கப்பட்டார். இந்தத் தொடரில்தான் தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் அவர் அறிமுகமானார். இதனையடுத்து ஒரு மீடியம் பேஸ் பந்துவீச்சாளராக முத்திரை பதித்து வந்தவர். கடந்த சில போட்டிகளில் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக தன்னுடைய திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

ஆல் ரவுண்டரான விஜய் சங்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை சிறப்பாக முடிக்கும் பட்சத்தில் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

போட்டோ கேலரி

1 of 22

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close