[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் நியமனம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், இடைத்தேர்தலுக்கான பரப்புரையை நாளை திருவாரூரில் தொடங்கும் நிலையில், திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துள்ளோம் மக்களவை தேர்தலில் 1 தொகுதி, இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் இந்திய குடியரசுக் கட்சி போட்டி - சே.கு. தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி)
  • BREAKING-NEWS பாதுகாப்பு படைகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் - கட்சித்தலைவர்கள், வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும்படி அரசியல் கட்சிகளுக்கு மீண்டும் தேர்தல் ஆணையம் கடிதம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நாளை மதியம் 2 மணிக்கு வெளியிடுகிறார் கமல்ஹாசன்
  • BREAKING-NEWS பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரின் காவலை ஏப்ரல் 2 வரை நீட்டித்தது பொள்ளாச்சி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நீதிபதி கண்முன்னே மனைவியை கத்தியால் குத்திய கணவன்! மருத்துவமனையில் மனைவிக்கு சிகிச்சை!

கூகுள் டூடுளில் கவுரவப்படுத்தப்பட்ட முதலை நண்பன் ஸ்டீவ் இர்வின்!

today-s-google-doodle-honours-legacy-of-crocodile-hunter-steve-irwin

முக்கிய தினங்களை சிறப்பு டூடுள் மூலம் சிறப்பிப்பது கூகுளின் வழக்கம். அதன்படி இன்றைய கூகுள் டூடுளில் இடம்பிடித்து இருக்கிறார் ஸ்டீவ் இர்வின்.

முதலை வீரன் என்று அழைக்கப்படும் ஸ்டீவ் இர்வினின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் புகைப்படத்தை டூடுளாக வைத்து கவுரவம் செய்துள்ளது கூகுள். யார் இந்த ஸ்டீவ் இர்வின்?

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் ஒரு தம்பதி வன உயிரின சரணாலயத்தை நடத்தி வந்தார்கள். முதலை வேட்டைக்காரர்களான அந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் ஸ்டீவ் இர்வின். குழந்தை முதலே வன உயிரினங்களுடன் பழக்கப்பட்ட வந்த இர்வின் தனது 6 வயதில் மலைப்பாம்புகளை பிடித்து விளையாண்டார். தன்னுடைய 9வது வயதில் முதலைகளை கையாளக்கற்றுக்கொண்டார்.

இப்படி வன உயிரினங்களுடன் மிகவும் நெருக்கமாக பழகத்தொடங்கிய இர்வின் 1990களின் உலகம் முழுவதும் தெரிய தொடங்கினார். இர்வினின் ஆவணப்படங்கள் உலக மக்களை ஆச்சரியம் கொள்ளச்செய்தது. இர்வினை பற்றிகேள்விப்பட்ட முதலை வேட்டையாளரான டெர்ரி என்ற பெண் அவருடைய சரணாலயத்த்துக்கு விசிட் அடித்துள்ளார். அவரைக்கண்டதும் காதலில் விழுந்த இர்வின், தன்னுடைய காதலை தெரிவிக்க, அந்தக்காதல் திருமணத்தில் முடிந்தது. இர்வின் - டெர்ரி தம்பதிக்கு பிந்தி, ராபர்ட் என்ற இரு குழந்தைகள் பிறந்தனர்.

1996ல் இர்வின் நடத்திய தி குரோக்கடைல் ஹன்டர் நிகழ்ச்சி மூலம் அவருக்கு ரசிகர் பட்டாளமே உருவானது. எந்த பாதுகாப்பும் இன்றி ஒரு மனிதன் முதலைகளுடன் இத்தனை நெருக்கமாக பழக முடியுமா என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர். ஒரு முறை தன்னுடைய இளையமகன் ராபர்ட்டை 6 மாத குழந்தையாக கையில் வைத்துக்கொண்டு பெரிய முதலை ஒன்றுக்கு இர்வின் இறைச்சி வழங்கினார். அந்த புகைப்படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் எவ்வளவு பெரிய முதலை வேட்டைக்காரராக இருந்தாலும், கைக்குழந்தையை வைத்துக்கொண்டு விலங்குகளுடன் பழகுவது சரியல்ல என்று கண்டனங்கள் எழுந்தன. பிரச்னை பெரிதாக மன்னிப்புக் கோரி முற்றுப்புள்ளி வைத்தார் இர்வின்.

கைக்குழந்தையாக இருந்தது முதலே வேற்று உயிரினங்களுடனே வாழ்ந்து வந்த இர்வின், தன்னுடைய மரணத்தையும் அவ்வழியே தேடிக்கொண்டார். 2006ம் ஆண்டு கடலில் வாழும் ஆபத்தான உயிரினங்கள் குறித்து ஆவணப்படம் எடுத்துக்கொண்டு இருந்த போது stingray எனப்படும் கொட்டும் திருக்கை அவரது மார்புப்பகுதியில் கொட்டியது. உடனடி சிகிச்சை அளிப்பதற்குள்ளேயே இர்வின் காலமானார். தன்னை தாக்க வரும் எதிரி என நினைத்து இர்வினின் மார்புப்பகுதியில் கொட்டிய அந்த மீனுக்கு நிச்சயம் தெரியபோவதில்லை தாம் கொன்றது ஒரு விலங்கு ஆர்வலரை என்று.

இன்று இர்வினின் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்களும், உயிரின ஆர்வலர்களும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். தனது தந்தை குறித்து நினைவுகளை பகிர்ந்துள்ள அவரின் மகள் பிந்தி, என்றுமே எனக்கு ஒரு வழிகாட்டி வெளிச்சமாக இருப்பதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

(டெர்ரி, பிந்தி, ராபர்ட்)

இன்றும் இர்வினின் சரணாலயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கிறது. அவரது மனைவி டெர்ரி சரணாலயத்தை கவனித்து வருகிறார். அங்கு இன்று முதலைகளை பிடித்து, விலங்குகளோடு நெருங்கி பழகுவது பிந்தியும், ராபர்ட்டும். இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவர்கள் ஸ்டீவ் இர்வினின் ரத்தம். அப்படித்தான் இருப்பார்கள்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close