[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

யானைகள் பற்றி அதிகம் அறியப்படாத அரிய பத்து செய்திகள்

ten-amazing-facts-about-elephants

‘சின்னத்தம்பி’ சர்ச்சைக்குப் பிறகு யானை குறித்த விழிப்புணர்வு அதிகம் பேசுப்பெருளாகி உள்ளது. யானைகள் பற்றிய மேலும் பல வழிகளில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதையொட்டி அதிகம் அறியப்படாத யானைகள் பற்றிய பத்து செய்திகள் இவை.  


1 உயிரினங்களிலேயே மிகப்பெறிய விலங்காக யானை கருதப்படுகிறது. இதன் சராசரியான வாழ்நாள் எழுபது ஆண்டுகள். ஏறக்குறைய மனித வாழ்நாளை ஒத்த உயிரினமாக இது உள்ளது. 

2 அரிமா, வேங்கை போன்ற வலிமையான விலங்கினங்களுக்கு இணையான வலிமை கொண்ட ஒரு விலங்காக நிலத்தில் யானை திகழ்கிறது. அதே சமயம் புலி, சிங்கம் போன்ற விலங்குகளை தன்னிடம் நெருங்கவே அச்சுறுத்தும் விலங்காகவும் யானை இருக்கிறது. 

3 பல சிங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு யானையை ஒருவேளை கொல்ல நேரலாம். அவ்வாறு ஏற்படும் சண்டைகள் இளைய யானைக்கும் சிங்கத்திற்குமான சண்டையாகவே இருக்கும். பருமனிலும் ஆகிருதியிலும் பலம் கொண்ட பெரிய யானையை வீழ்த்துவது என்பது மற்ற விலங்கினங்களுக்கு அவ்வளவு எளிதல்ல.

4 ஒருநாளைக்கு 16 மணி நேரத்தை உணவு சேகரிப்பதற்கு செலவு செய்கிறது யானை. இவற்றின் செரிமானத்திறன் மிக மந்தமானது. உண்பதில் 40 விழுக்காடே செரிமானமாகிறது. எனவே அளவுக்கு அதிகப்படியான உணவை இவை உட்கொள்ள வேண்டியுள்ளது. வளர்ந்த யானை நாள் ஒன்றிற்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவை உட்கொள்கிறது. 

5 யானைக் குடும்பத்தில் மொத்தம் மூன்று சிற்றினங்கள் உலகில் இன்றைக்கு உயிரோடு உள்ளன. ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் இவை மூன்றும்தான் அவை. இந்த இனங்களுக்கு இடையே பல வேறுபாடுகள் உண்டு. இனங்களுக்கு தக்க, நிலத்திற்கு ஏற்ப இவைகளின் குணநலன்கள், அங்க மாறுபாடுகள் ஏராளம் உள்ளன. 

6 ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளைவிட அளவில், உருவத்தில் பெரியவை. ஆப்பிரிக்க யானைகளுக்கு காதுமடல்கள் பெரியதானவை. ஆண், பெண் இரண்டிற்கும் நிகரானத் தந்தங்கள் உண்டு. ஆசிய பெண் யானைகளுக்கு தந்தங்கள் இருக்காது. சில யானைகளுக்கு மட்டும் அரிதாக இருக்கலாம். 

7 ஆப்பிரிக்க யானைகளின் தலையையொட்டி உள்ள முதுகுபுறம் சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் அல்லாமல் சமனாகவும் இருக்கும். இவற்றிற்கு துதிக்கை நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். முன்னங்கால்களில் நான்கு முதல் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும் காது மடல்கள் சிறியதாகவும் இருக்கும். இவற்றிற்கு துதிக்கை நுனியில் மேல் நோக்கியவாறு ஓரிதழ் மட்டுமே இருக்கும்.

8 ஆண் யானை பொதுவாக மூன்று மீட்டர் உயரமும் 6000 கிலோ கிராம் எடையையும் கொண்டிருக்கும். யானையின் தோல் சுமார் 3செ.மீட்டர் தடிமனாக இருக்கும். யானை பெருத்த உடலைக் கொண்டிருந்தாலும் மலையின் மீதும் செங்குத்தான இடங்கள் மீது சரளமாக ஏறவும் இறங்கவும் செய்யும். அந்தத் திறன் அவற்றிற்கு அதிகமாகவே உண்டு.

9 யானையின் துதிக்கை மிக விஷேசமானது. மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இந்தத் துதிக்கையினால் பெருமரக் கிளைகளை ஒடிக்கவும், உடைக்கவும் அதனால் முடியும். அதோடு பெரும் சுமைகளையும் துதிக்கையினால் இவை தூக்கிச் சுமக்கின்றன. உணவை எடுக்கவும் நீர் அருந்தவும் யானை தன் துதிக்கையை பயன்படுத்திக் கொள்கிறது.

10 யானைத் தந்தங்களுக்கு யானைக்கோடு என்ற சிறப்பு பெயரும் உள்ளது. இந்தக் கோடானது யானையின் கடவாய்ப் பற்களின் நீட்சியாகும். இதற்கு எயிறு, தந்தம் என்ற இதர பெயர்களும் இருக்கின்றன. தந்தம் என்றால் பல் என்று பொருள். சராசரியாக தந்தங்கள் பத்து அடி வரை வளரும். அதோடு இத்தந்தங்கள் சுமார் 90 கிலோகிராம் எடை வரை கனக்கக்கூடியவை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close