[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
  • BREAKING-NEWS மதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்

மாநில சுயாட்சிக்கு நெஞ்சு நிமிர்த்தி குரல் எழுப்பிய அண்ணாவின் நினைவு தினம்..!

anna-s-50th-anniversary-day-2019

அரசியல் ராஜதந்திரி, அடுக்கு மொழி வித்தகர், சிந்தனையைத் தூண்டும் பேச்சாளர், எழுச்சிமிகு எழுத்தாளர் போன்ற அடையாளங்களுக்குள் மட்டுமே இவரை அடைத்துவிட முடியாது. சரியாக வாராத தலை, அரை குறை தாடி வளர்ந்த முகம், வெற்றிலைக் கறைபடிந்த பற்கள், அழுக்கு படிந்த வேட்டி என்ற தோற்றத்துடன் வலம்வந்த அண்ணா தான், இன்றும் தொடரும் 50 ஆண்டு கால திராவிட ஆட்சிக்கு அடித்தளமிடுவார் என்று அன்று யாரும் கணித்திருக்க மாட்டார்கள்.

Related image

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார் அண்ணா. அவரது மறைவுச் செய்தி கோடிக்கணக்கான தமிழர்களுக்கு தாங்கமுடியாத துயரத்தைக் கொடுத்தது. 1969 பிப்ரவரி 3இல் அண்ணா மறைவுக்கு கூடிய கூட்டம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. மக்கள் சிந்திய கண்ணீருக்கு பிரதிபலனாக இறந்த ஒரு தலைவன் திரும்பி வரவேண்டும் என்றால் அது அண்ணாவாகத் தான் இருக்க முடியும் என வெளிநாட்டுப் பத்திரிகைகள் எழுதின. அரை நூற்றாண்டுக்கு முன்னால் அண்ணாவால் முன்வைக்கப்பட்ட முழக்கம் அவர் மறைந்த இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது.

Related image

நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் திறக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் இன்று நடந்து கொண்டிருக்க தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை சட்டமாக்கி இந்தி பேசாத மாநிலங்களுக்கு தமிழகத்தை முன்னுதாரணமாக மாற்றியவர் பேரறிஞர் அண்ணாதான். ஜிஎஸ்டி முறை குறித்து இருவேறு கருத்துகள் இருக்கும் இன்றைய நிலையில், ஏழைகள் வரி பணக்காரர்கள் வரி குறித்தும் நேர்முக வரி மறைமுக வரி குறித்தும் 50 ஆண்டுகளுக்கு முன்பு அவர் விளக்கிய விதம் இன்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

Image result for அண்ணா

பெரும்பான்மை மக்களின் மொழிதான் இந்தியாவில் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசப்பட்டபோது, நாட்டில் காகங்கள் அதிகம் இருக்க மயிலை தேசியப் பறவையாக தேர்ந்தெடுத்தது ஏன்? என்ற கேள்வி மூலம் முடக்கியவர் அண்ணா. நாட்டின் பாதுகாப்பு தவிர, மற்ற அதிகாரங்கள் அனைத்தையும் பற்றி சிந்திப்போம், மாநிலங்களுக்குத் தேவையான அதிகாரங்களை மாநிலங்கள் எடுத்துக்கொள்ளட்டும். பின்னர் மாநிலங்கள் விரும்பித் தருகின்ற அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்ளட்டும் என்று அரை நூற்றாண்டிற்கு முன்னரே எடுத்துரைத்தவர் பேரறிஞர் அண்ணா.

Image result for அண்ணா

இந்தித்திணிப்பு முதல் நீட் தேர்வு, நவோதயா பள்ளி விவகாரங்கள் வரை மாநில சுயாட்சி குறித்த விவாதங்கள் இன்றைக்கு எழுந்திருக்கின்றன. அரசாங்கத்தின் குறிப்பிட்ட செயல்களுக்கு பொதுமக்களின் ஆதரவு உண்டா; இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளும் வாக்களிப்பு முறை அமலாக்கப்படாத வரை, ஜனநாயகத்துக்கான எந்தப் பலனையும் மக்கள் எதிர்பார்க்க முடியாது என 1962 இல் நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணாவின் கருத்துதான் இன்றைய தமிழகத்தின் மிக முக்கிய வாழ்வாதாரப் பிரச்னைகளில் எதிரொலிக்கிறது.

Related image

ஆட்சி புரிந்தது இரண்டே ஆண்டுகள் என்றாலும், பெரியாரின் கொள்கைகளான சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கியது, மதராஸ் எனும் மாகாணத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றியது, நில உச்சவரம்பு சட்டத்தை நிறைவேற்றியது, கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியது உள்ளிட்ட திட்டங்கள் மாற்றத்திற்கு வித்திட்டன. 1909இல் காஞ்சியில் பிறந்து, சென்னையில் பட்டம் பயின்று திருப்பூரில் தந்தை பெரியாரைச் சந்தித்து ஈரோட்டில் பத்திரிகையாளராகி கருத்து வேறுபாடால் வடசென்னையில் திராவிடர் முன்னேற்றக் கழகம் கண்டு ஆரிய மாயை தீட்டியதால் திருச்சியில் சிறைப்பட்டு பட்டி தொட்டி எங்கும் இந்தித்திணிப்பை எதிர்த்து 1967 இல் முதல்வராகி ஏட்டில் இருந்த பெரியார் கொள்கைகளை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தி 1969 இல் மூச்சை நிறுத்திய அண்ணாவின் சமூக சிந்தனை பெரும் மாற்றத்தை விளைவித்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close