[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

பஸ் டிக்கெட் விலையா ? விமான டிக்கெட் விலையா ? பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்

omni-bus-ticket-rate-hike

தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை. தமிழ் புத்தாண்டு, மற்றும் தொடர் விடுமுறைக் காலங்களில் ஆம்னிப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகைக்கும் தனியார் பேருந்துகளில் டிக்கெட் விலை உச்சத்தை தொட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்டது பொங்கல். போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் மற்றும் சனி, ஞாயிறு என ஏறத்தாழ ஒருவாரம் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை கிராமங்களில் தான் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்பதால் அங்கிருந்து சென்னை வந்து பணிபுரியும் அனைவரும் பொங்கலுக்கு ஊர் திரும்புவது வழக்கம். இதனால் சென்னை பேருந்து நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதனை சமாளிக்க ஆண்டு தோறும் அரசு சார்பில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பண்டிகை நாட்களில் சென்னையிலிருந்து பெரும்பான்மையான மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கின்றனர். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தனியார் பேருந்துகளில் டிக்கெட் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்ல அரசு பேருந்தின் கட்டணம் 450 ரூபாய். ஆனால் தனியார் பேருந்தில் சாதாரண நாட்களில் 850 ரூபாய் வசூல் செய்கிறார்கள். ஆனால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் 1200  முதல் 1900 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல, தனியார் ஏசி பேருந்தில் 2520 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதேபோல, சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்ல அரசு பேருந்தின் கட்டணம் ரூபாய் 700. இதே ஏசி இல்லாத தனியார் பேருந்தில் சாதாரண நாட்களில் 900 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் 1600 வரையும் ஏசி  பேருந்தில் 2450 ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுபோல் திருநெல்வேலிக்கு செல்ல அரசு பேருந்தின் கட்டணம் ரூபாய் 650. தனியார் பேருந்தில் 850. ஆனால் பொங்கலோ தீபாவளிக்கோ 2000 முதல் 2700 வரை வசூலிக்கப்படுகிறது. 

சென்னையிலிருந்து கோயம்பத்தூர் செல்ல அரசு பேருந்தின் கட்டணம் ரூபாய் 500. ஆனால் சாதாரண நாட்களில் 900 ரூபாய் முதல் 1500 வரை தனியார் பேருந்துகளில் வசூல் செய்யப்படுகிறது. மேலும் ஏசி பேருந்தில் 2200 முதல் 2800 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது பண்டிகை விடுமுறை நாட்களில். தீபாவளி, பொங்கல் பண்டிகை வரும்போதெல்லாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு அதிகளவிலேயே இயக்குகிறது. இதற்கான முன்பதிவும் முன் கூட்டியே தொடங்குகிறது. ஆனால், அரசுப் பேருந்தில் சென்றால் சொந்த ஊர்களுக்கு தாமதமாக செல்வோம், தனியார் பேருந்தில் சென்றால் விரைவாக சொந்த ஊருக்கு செல்லலாம் என்ற மக்களின் மன நிலையை. ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தங்களது சாதகத்துக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். அதன் விளைவே பஸ் கட்டண உயர்வு. 

இதேபோன்ற குற்றச்சாட்டுக்கு 2016 இல் ஆளான ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு, தீபாவளி பண்டிகையின்போது அதிக கட்டணம் வசூலித்ததை திருப்பித் தர உத்தரவிட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக தொடர்ந்து புகார்கள் எழுந்துகொண்டே இருந்த நிலையில் தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழக அரசு போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் இயங்கி வருகிறது. மேற்கண்ட தொலைபேசி எண் மூலம், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்யும்போது அதிகக் கட்டணம் வசூலித்தல் சம்பந்தமான குறைகள் குறித்து பொது மக்களும் புகார் தெரிவிக்கலாம். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி இப்போதும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாகியிருக்கிறது. அரசு நடவடிக்கை எடுக்குமா ? 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close