[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

ஆப்கானிஸ்தானை மையப்படுத்தி மோதும் மோடி - ட்ரம்ப் - உண்மை என்ன?

new-delhi-said-there-was-no-question-of-putting-boots-on-the-ground-to-donald-trump

பிரதமர் மோடி ஆப்கானிஸ்தானில் நூலகம் அமைத்ததில் என்ன பயன்? என கிண்டலடித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு இந்தியா பதிலடி தந்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் செய்யும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளார். இதை வெறும் கிண்டலாகவோ அல்லது மோடி மீதான குற்றச்சாட்டாகவோ மட்டும் பார்த்துவிட முடியாது. இது உலக அளவிலான ஒரு அதிகாரப் பனிப்போர் என்று கூற வேண்டும். இந்தச் சம்பவத்தை நாம் பார்ப்பதற்கு முன்னர், ஆப்கானிஸ்தான் குறித்த சில தகவல்களையும் பார்த்துவிட வேண்டும். உலக நாடுகளின் பல உள்நாட்டு போர்களுக்கு இன்றவுளவும் முக்கிய காரணமாக இருப்பது ரஷ்யா மற்றும் அமெரிக்கா என்ற இரண்டு பெரிய அதிகார சக்திகள் தான். இந்த இரண்டு நாடுகள் தான் ஆப்கானிஸ்தானின் பிரச்னைகளுக்கும் காரணம் என்று சொன்னால் அது சரியாக இருக்கும்.

ஆப்கானிஸ்தானில் இடதுசாரி மற்றும் ஜனநாயகக் கொள்ளை ஆகியவற்றிற்கு இடையேயான மோதல் 1979ஆம் ஆண்டில் விஸ்வரூபம் எடுத்தது. இதில் இடதுசாரிக் கொள்கைக்கு எதிராக முகாஜீதின் படைகள் போரிட்டன. அவர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. இதனால் இடதுசாரி கொள்கையை காக்க ஆப்கான் அரசுக்கு ஆதரவாக சோவியத் ரஷ்யாவின் படைகள் அங்கு களமிறங்கின. இதையடுத்து அங்கு அமெரிக்காவின் பலத்துடனும், பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஆதரவுடனும் செயல்பட்ட கிளர்ச்சியாளர்களுக்கும், சோவியத் ராஷ்யாவின் படைகளுடன் நின்ற ஆப்கான் அரசுக்கும் இடையே கடும் போர் ஏற்பட்டது. லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் இதில் கொன்று குவிக்கப்பட்டனர். பல லட்சம் பேர் பாகிஸ்தான், கஜகஸ்தான் உள்ளிட்ட அண்மைநாடுகளுக்கு சென்றுவிட்டனர். இந்தப் போரில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஆப்கான் அரசை விட, அமெரிக்காவும் ரஷ்யாவும் தீவிரமாய் இருந்தன. ஏனென்றால் இங்கே நடந்து உள்நாட்டு போர் மட்டுமல்ல சர்வதேச அதிகாரப் போர். 

ஆசிய நாடுகளில் யாரின் ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதற்கான போராக இது பார்க்கப்பட்டது. இதையடுத்து ஜனநாயக கொள்கை கொண்ட நாடுகள் பலவும் கிளர்ச்சியாளர்களுக்கு உதவியது. இதன் விளைவாக ஆப்கானியர்களின் பலி எண்ணிக்கையும் அதிகரிக்க, 1989ஆம் ஆண்டு சோவியத் படை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறத்தொடங்கியது. இதனை அமெரிக்கா வெற்றியாக கொண்டாடியது. முற்றிலும் சோவியத் ரஷ்யாவின் படைகள் வெளியேறியதும், அமெரிக்கா தாங்கள் வாக்குறுதி அளித்ததுபோல ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டமைக்காமல் அலட்சியம் காட்டியது. மேலும் அதன்பின்னர் ஆப்கானிஸ்தானின் மீதான நாட்டத்தையும் அமெரிக்கா முற்றிலும் நிறுத்திக்கொண்டது.

இதன்பின்னர் சில ஆண்டுகள் கிளர்ச்சியாளர்களின் பிடியில் ஆப்கான் இருக்க, இதன்பின்னர் அங்கு தாலீபான்களின் ஆதிக்கம் ஆரம்பித்தது. 1996ஆம் ஆண்டில் ஆப்கான் தலைநகர் காபூலை தாலிபான் படைகள் கைப்பற்றியது. அடுத்த நான்கு ஆண்டுகளில் தாலிபான் படைகள் முழு ஆப்கானையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதன் விளைவு, ஆப்கானிஸ்தானில் முஸ்லீம் கொள்கைகள் கடுமையாக்கப்பட்டன. பெண்களின் உரிமைகள் முற்றிலும் பறிக்கப்பட்டன. பெண்கள் வேலைக்கு செல்வது தடை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு அல்-கொய்தா இயக்கம் வளர்ந்தது. அதனை ஒழிக்க 2001ஆம் அமெரிக்கா தனது தாக்குதலை நடத்தியது. அத்துடன் தாலிபான் படைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 

அத்துடன் சோவியத் ரஷ்யாவை எதிர்த்த போது, அமெரிக்காவால் நிதி உதவி அளிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஒசாமா பின் லேடன் பின்னர் அமெரிக்க படைகளால் தாக்கப்பட்டார். அதற்கு காரணம் பின் லேடன் இஸ்ரேலுக்கு எதிராக செயல்படத் தொடங்கினார் என கூறப்பட்டது. இந்த வரலாறுகளை இங்கே குறிப்பிடுவது எதற்கென்றால், இதனை உற்றுப் பார்க்கும் போது, அமெரிக்காவின் அடிப்படை திட்டமாக இருப்பது ஒரு நாட்டில் பிரிவினை வாதத்தை உண்டாக்கி, பின்னர் அங்கு தமது ஆதிக்கத்தை செலுத்துவது அதன் நோக்கம் என்பது விளங்குகிறது. ஆரம்பத்தில் அமெரிக்க படைகளால் ஆதரிக்கப்பட்ட ஆப்கான் இயக்கங்கள், பின்னர் அதே படைகளால் கொல்லப்பட்டன. இதற்கு காரணம் ஆசிய நாடுகளில் தனது ஆதிக்கமே இருக்க வேண்டும் என்ற அமெரிக்க எண்ணத்தால் தான். 

ஆனால் அண்மைக்காலமாக அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை மிஞ்சும் வகையில் ஆசிய நாடுகளின் வளர்ச்சி என்பது சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக சீனா அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக பொருளாதாரத்தில் உள்ளது. இந்தியாவும் உலக பொருளாதார ரீதியில் பெரும் பங்காற்றி வருகிறது. இதனால் சீனா மற்றும் இந்தியா இடையே மோதல்களை ஏற்படச் செய்ய அமெரிக்கா அவ்வப்போது சதி செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. அத்துடன் வடகொரியா அமெரிக்காவை கொஞ்சம் கூட மதிக்காமல் நடந்துகொண்டது. இதனால் தென் கொரியா மற்றும் வடகொரியா இடையே போர் ஏற்படும் அளவிற்கு அமெரிக்கா பிரச்னையை ஏற்படுத்தியது. 

அத்துடன் சீனாவையும் வட கொரியாவை நோக்கி திருப்பியது. ஆனால் திடீரென தென் கொரியாவும், வடகொரியாவும் இணைந்தன. அத்துடன் சீனா வட கொரியாவிற்கு ஆதரவளித்தது. இதனை சுதாரித்துக்கொண்ட அமெரிக்க சட்டென இறங்கி வந்து, வடகொரியாவுடன் நட்பு பாராட்டியது. இருந்தபோதிலும், வடகொரியா அணு ஆயுத கூடங்களை அழித்ததால் தான் சேர்ந்தோம் என்று அமெரிக்கா கூறிக்கொண்டது. ஆனால் அதன்பின்னரும், அணு ஆயுதங்களை தயாரிக்கும் விவகாரங்களில் வட கொரியா அமெரிக்காவை சற்றும் மதிக்காமல் அலட்சியப்படுத்தியது. இதற்கிடையே பாகிஸ்தானையும் அமெரிக்கா பகைத்துக்கொண்டது.

இந்நிலையில் நிலை குலைந்திருக்கும் ஆப்கானிஸ்தானை மீட்கும் நிதிகளை வழங்க, அங்கேயும் தனக்கிருக்கும் செல்வாக்கு பறிக்கப்படுமோ என்ற எண்ணத்தில் தற்போது அமெரிக்க குரலிட ஆரம்பித்துள்ளது. அதன் எதிரொலியாகவே இந்திய பிரதமர் மோடி என்ன செய்தார்? அவர் அமைத்த நூலகத்தால் என்ன பயன்? என கிண்டலடித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மேலும் மத்திய ஆசியவிற்கு செல்லும் இந்தியாவின் பெரும் பொருளாதார வழியாக ஆப்கானிஸ்தான் இருப்பதால், இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவை முறித்து, அதன்மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தை முடக்கும் எண்ணமாகவும் ட்ரம்பின் பேச்சு கருதப்படுகிறது. 

ஆனால் உண்மையில், இந்தியா பல நன்மைகளை ஆப்கானிஸ்தானிற்கு செய்து வருகிறது. குண்டு வெடிப்பில் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றக் கட்டடம் சேதமடைந்திருந்தது. அதனை கடந்த 2015ஆம் ஆண்டு சீரமைத்து பிரதமர் மோடி திறந்து வைத்தார். அத்துடன் ஆப்கான் தலைநகர் காபூலில் உயர்ந்த தரத்திலான பள்ளிக்கூடம் மற்றும் கல்வி நிலையங்கள் அமைக்க இந்திய முயற்சி எடுத்துள்ளது. மேலும் ஆப்கான் மாணவர்கள் உதவித்தொகையுடன் இந்தியாவில் கல்வி பயிலவும் வழிவகை செய்து வருகிறது. 

ஈரான் எல்லைக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து கொண்டு செல்லும் 218 கி.மீட்டர் தூரம் கொண்ட சாலையை அமைத்து வருகிறது. இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்பு அணை (சல்மா அணை) கட்டப்பட்டுள்ளது. 3,500க்கும் மேற்பட்ட ஆப்கானியர்களுக்கு இந்தியாவில் தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 1.1 மில்லியன் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கியுள்ளது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நேரடியாக பயணிக்கும் விமான தளம் 2017ல் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தப் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது. இப்படியிருக்க டொனால்ட் என்ன செய்தது இந்தியா ஆப்கானிஸ்தானிற்கு என கிண்டலடித்துள்ளார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, “ஆப்கானில் கால் வைக்காமல் கேள்வி எழுப்பாதீர்கள்” என ட்ரம்பை சாடியுள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close