[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

யார் இந்த பக்ஷி ராஜா? பறவை மனிதர் சலீம் அலியை தேடும் இளம் தலைமுறை 

did-you-know-akshay-kumar-s-role-in-2-0-is-inspired-by-birdman-of-india-salim-ali

‘2.0’ ரிலீஸுக்கு பிறகு வைரல்மேன் ஆகியிருக்கிறார் சலீம் அலி. நேற்று வரை வன உயிர் ஆர்வளர்கள் மட்டுமே அறிந்த இந்தப்பெயர் இன்று பெரும் புகழை சம்பாதித்திருக்கிறது. சலீம் போன்ற ஆய்வாளர்களை பாட புத்தகத்திற்குள் கொண்டு சேர்ப்பதற்கே பெரும்பாடு பட வேண்டிருக்கிறது என குறைப்பட்டுக் கொண்ட காலம் ஒன்றிருந்தது. 

அந்தப் பறவை மனிதனை இன்று தேசமே உயர்ந்து பார்க்க ஆரம்பித்திருக்கிறது. காரணம்; பக்ஷி ராஜா. அதாவது அக்‌ஷய் குமார். அப்படியென்றால் ‘2.0’. இதை தாண்டினால் ரஜினிகாந்த். இவர்களுக்குப் பின்னால் இயக்குநர் ஷங்கர். ஒரு ஆய்வாளரை பெருவாரியான மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்க இத்தனை பேர் உழைக்க வேண்டிருக்கிறது. அதன் பிறகுதான் இன்றைக்கு ஒவ்வொரு நபரும் கூகுள் தேடு பொறியில் சலீம் அலியை பற்றி தகவலை தேட ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்த ஒரு காரணத்திலேயே ‘2.0’ பெரும் வெற்றியை ஈட்டி இருக்கிறது. அதுவும் இந்திய அளவில் இந்தச் செல்வாக்கை பெற்றியிருக்கிறது.

‘2.0’ திரைப்படம் சலீல் அலியை பற்றி அறிந்து கொள்ள வைத்ததைபோல சிட்டுக் குருவிகளை பற்றிய கரிசனத்தினையும் மக்கள் மத்தியில் உண்டாக்கி இருக்கிறது. இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல என்பதை உணர்த்தியிருக்கிறது. ஆகவேதான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் ‘பல்லூயிர் ஓம்புதல்’ என்று பாடி இருக்கிறார். பல உயிர்கள் சேர்ந்ததே உலகம் என்பது அதன் பொருள்.

‘2.0’ படம் சொல்வதைபோல சிட்டுக் குருவிகள் முழுக்க செல்போன் டவர்களால் மட்டுமே செத்து போகின்றன என்பதை அறிவியல் உலகம் இன்னும் இறுதியாக ஏற்கவில்லை. அவை மடிந்து போவதற்கு பல காரணிகள் உண்டு. அதில் ஒன்றே இந்த செல்போன் டவர்கள் வெளியேற்றும் கதிர்வீச்சு. 

ஆக, அதை ஒன்றை மட்டுமே குற்றவாளியாகிவிட்டு நாம் ஓடி ஒளிந்துல் கொள்ளக் கூடாது. மேலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் டவர் கதிர்வீச்சே காரணம் என ஒரு ஆய்வை கூறினார்கள். அந்த அறிவியல் செய்தி ஊடகங்களில் எதிரொலித்தது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டே அந்த ஆய்வில் முழு உண்மைகள் இல்லை என பறவை ஆய்வாளர்கள் அறிவுலகத்திற்கு எடுத்து கூறிவிட்டார்கள். ஆக, இப்போது அதுவல்ல பிரச்னை. சலீம் அலியை அறிந்து கொள்வதுதான் முக்கியம்.

இந்தப் பறவை மனிதன் சலீம் அலி, தனது வாழ்க்கையை பறவைகள் ஆய்விற்காக ஒப்படைத்ததே ஒரு விநோதம். சிறுவயதில் தனது தோட்டத்தில் காணக் கிடைத்த ஒரு பறவையை தன் கைத்துப்பாக்கியால் சுட்டார் சிறுவன் சலீம் அலி. அந்தப் பறவை இவரது இலக்கிற்கு இரையானது. உடனே வெற்றியின் மகிழ்ச்சியில் மிதந்த சிறுவன் சலீம் அந்தப் பறவையை எடுத்து கைகளால் தடவினான். அப்போதுகூட மனிதாபிமானம் அவர் கண்களை திறக்கவில்லை. மயக்கம் தான் மிதந்தது. 

சுட்டு வீழ்த்திய பறவையின் கழுத்தில் தென்பட்ட சின்ன மஞ்சள் திட்டை பார்த்து பிரமித்த சிறுவன் சலீம், அந்தக் கோட்டுக்கு என்ன அர்த்தம் என அறிய ஆவல் கொண்டான். வேறு என்ன செய்ய முடியும்? தனது மாமாவிடம் போய் விளக்கம் கேட்டான். அவர், ஓரளவுக்கு பறவை உலகத்தை அறிந்தவர். ஆனால் சிறுவன் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு தரவாக அவர் படித்து வைக்கவில்லை. 

ஆகவே Bombay Natural History Society போய் விசாரித்தால் விளக்கம் கிடைக்கும் என்றார். விடுவானா சிறுவன். போய் நின்றான். அங்கே அதன் இயக்குநராக இருந்தவர் மில்லர்ட். அவர் சிறுவன் கொண்டு வந்த பறவையை பார்த்தார். அதற்கு உரிய விளக்கத்தை கொடுத்தார். மேலும் அங்கே அவர் சேகரித்து வைத்திருந்த பறவைகளின் புகைப்பட தொகுப்பை பார்த்தான் சிறுவன். செத்து போன பறவைகள் எப்படி பதப்படுத்தி பாதுக்காக்கப்பட்டு வருகிறது என்பதை புரிந்து கொண்டான். 

மில்லர்ட் கொடுத்த விளக்கம், பறவைகளின் வாழ்விடத்தை நோக்கி சலீமை தள்ளியது. வேட்டை பிரியனாக இருந்த சிறுவன் சலீம் மொய்ஜுதீன் அப்துல் அலியை பறவைக் காதலன் சலீம் அலியாக உருமாற்றம் செய்தது. புதிய மனிதனாக பிறந்தான் அந்தச் சிறுவன்.  

சலீம், பாம்பாயிலுள்ள கேத்வாடிதான் பிறந்தார். அதாவது 1876 ஆண்டு நவம்பர் 12. அவர் பிறந்த அதே நவம்பர் மாதத்தில்தான் இன்று ‘2.0’ திரைப்படம் வெளியாகி அவரை உலகறிய செய்துள்ளது. 

சலீம் கல்லூரி வரை போனார். செயின்ட் சேவியர் கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஆனால் அவர் கவனம் சிட்டுக் குருவி பற்றியும் சிறகை விரித்து அலையும் பறவைகள் பற்றியும் இருந்தது. அதற்கிடையில் குடும்ப உறவினரின் தொழில் உதவிக்காக பர்மா சென்றார். மீண்டும் 1920ல் பாம்பாய் திரும்பினார். அதன் பிறகு பாம்பாய் தேசிய வரலாற்றுக் கழைக அருங்காட்சியகத்தில் வேலை. அந்தவேலையை தொடர்ந்தபடி Dr Irwin Strassman என்பரிடம் ஜெர்மனியிலுள்ள பெர்லினுக்குச் சென்று பயிற்சி எடுத்தார். அதன் பிறகு இந்தியா திரும்பிய அவரை இந்த முறை வறுமை வசமாக கட்டி அணைத்துக் கொண்டது.

மும்பை நகரில் துறைமுகம் அருகில் தோட்டத்துடன் கூடிய வீட்டில் சலீம் அலி வாழ்ந்தார். அவர் வீட்டின் அருகே இருந்த மரங்களில் ஏராளமான தூக்கணாங் குருவிகள் கூடுகட்டி வாழ்ந்தன. அந்த அனுபவம் அவரை ஒரு நூல் எழுதத் தூண்டியது. உடனே தூக்கணாங் குருவிகள் குறித்து 1930 ஆம் ஆண்டு நூல் எழுதி வெளியிட்டார். இந்த ஆய்வு நூல்தான் அவரை பறவை மனிதனாக உலகிற்கு படம் பிடித்துக் காடியது.

இவருக்கு 18 வயதிலேயே திருமணம் நடந்தது. தெஹ்மினாவை கரம் பிடித்தார். அவரது குடும்ப வாழ்க்கை அவ்வளவு செல்வம் மிகுந்ததாக இல்லை. ஆனாலும் மனம் தளராமல் பறவைகள் மீது கவனத்தை செலுத்து வந்தார் சலீம். அவர் பறவைகள் ஆராய்ச்சிக்காக போகாத இடங்கள் இல்லை. மலைகள் இல்லை எனும் அளவுக்கு பயணித்தார். மேற்குத் தொடர்ச்சி மலை தொடங்கி, பரத்பூர், ஹிமாலயா, ராஜஸ்தான் பாலைவனம், ஆப்கானிஸ்தான் பனிச்சிகரங்கள், நேபாளம், மியான்மர் என விரிந்தது இவரது ஆய்வு உலகம். 

இவரது சில புத்தகங்கள் தமிழிலும் வெளியாகியுள்ளன. பறவைகள் என்றால் தமிழ் நாட்டுல் மா.கிருஷ்ணனை பலரும் ஞாபகம் கொள்வர். அவருக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தவர் சலீம். 

பத்மபூஷன், பத்மவிபூஷன், ஜோன் சி பிலிப்ஸ் விருது பல விருதுகள் இவரது வீட்டை அலங்கரித்தது. உலகம் முழுவதும் பறவைகளின் வாழ்விற்காக உயர உயர பறந்த இந்த இந்திய குருவி இந்தப் பூமியை விட்டு 1987 ஜூன் 20 அன்று இறுதியாக வெளியேறியது.  அப்போது இந்தப் பறவைக்கு 90 வயது.

வெள்ளை தாடி, அழகான ஒரு தொப்பி, கையில் ஒரு கேமிரா என அந்த முதுமையிலும் மிக அழகா இருந்தார் இந்த இயற்கை காதலர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close