[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அமமுக மிகப்பெரிய வெற்றி பெறும் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் பாஜக சார்பில் மேனகா காந்தி போட்டியிடுகிறார்
  • BREAKING-NEWS குக்கர் சின்னம் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுபடி பொதுச்சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனு
  • BREAKING-NEWS காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்; கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுத்ததில் தவறில்லை - காங்கிரஸ் தேனி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  • BREAKING-NEWS 2ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு
  • BREAKING-NEWS டிடிவி தரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மற்ற வழக்குகளுக்கு முன்மாதிரியாக கருதக்கூடாது என்ற ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

என்ன சொல்கிறது ரஜினியின் 2.0.. விமர்சனம்..!

rajinikanth-2-0-review

மனித வாழ்வியலின் அங்கமாகிப் போன செல்போன்கள் மனிதர்களுக்கு எதிராக திரும்பினால் என்னாகும், அவ்வாறு நடக்கக் காரணம் என்ன என்பதை தனக்கே உரிய பாணியில் இயக்குநர் ஷங்கர் பிரமாண்டத்துக்கு துளியும் பஞ்சம் வைக்காமல் உருவாகியிருக்கும் திரைப்படம் 2.0.

திடீரென மக்களின் எல்லா செல்போன்களும் காற்றில் பறக்க என்ன செய்வதென தவிக்கிறது அரசாங்கம். வேறு வழியில்லை சிட்டியால் தான் இந்த ஆபத்திலிருந்து காக்க முடியும் என வசீகரன் சொல்ல, முதல்பாகமான எந்திரனில் பிரித்து மியூசியத்தில் வைத்த ரோபோ சிட்டியை உயிர்பிக்கிறார். அதன்பிறகு, செல்போன்கள் பறக்க காரணம் என்ன, அக்சய்குமாரின் பிளாஷ்பேக் போன்றவற்றை கண்டறிந்து மக்களை காக்கும் கதையே 2.0

ரஜினிகாந்த் வசீகரன், சிட்டி, 2.0 என எல்லா தோற்றங்களிலும் பொலிவுடன் தோன்றி ரசிக்க வைக்கிறார். அதோடு, இன்னுமொரு ஸ்பெஷல் தோற்றம் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ். அக்சய்குமார் பறவைகளின் காதலராக, கொடூர பறவையாக ஆச்சர்யப்படுத்துகிறார். எமி ஜாக்சனுக்கு ரஜினியுடன் இருக்கும் ஒரு ரோபோ கதாப்பாத்திரம்.

2.0 படத்தின் நாயகன் VFX. உலகின் முக்கியமான ஸ்டூடியோக்களில் 3000 கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அந்தக் காட்சிகள் ஒவ்வொன்றும் 3டியில் பிரமிக்க வைக்கின்றன. அந்தவகையில் VFX மேற்பார்வையில் சீனிவாசனின் பணி மகத்தானது. ஒரு திரைப்படத்திற்காக கிட்டத்தட்ட 4 ஆண்டுகள், கற்பனையை காட்சிகளாக்கிய துல்லியம் என இயக்குநர் ஷங்கரின் உழைப்பு வியக்கத்தக்கது.

மேலும், ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசை படத்தோடு ஒன்ற வைக்கிறது. ஆண்டனியின் எடிட்டிங், நிரவ்ஷா ஒளிப்பதிவு பலம். வழக்கமான ரஜினி படங்களில் இருக்கும் அம்சங்கள் முதல் பாதியில் குறைவாக இருக்கின்றன. அதனால், ரசிகர்கள் ஆர்ப்பாட்டமின்றி படம் பார்க்கிறார்கள். அதனையே இரண்டாம் பாதியில் ஆக்சன், அதிரடி என சமன் செய்து விடுகிறார் இயக்குநர் ஷங்கர். அது எல்லாவற்றையும் தாண்டி எண்ணற்ற உயிர்கள் வாழும் இந்த உலகம் மனிதர்களுக்கானது  மட்டுமேயல்ல எனும் அன்பை 550 கோடி ரூபாய் செலவில் தூவிய விதத்தில் ரசிக்க வைக்கிறது 2.0.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close