[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

இந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'

this-is-india-s-heaviest-rocket-and-it-s-called-as-bahubali

இஸ்ரோ பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மற்றும் மார்க் வகைக்கொண்ட ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இதில் எடைக் குறைந்த ராக்கெட்டுகளை பி.எஸ்.எல்.வி. மூலமாகவும், 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி மூலமாகவும், இன்னும் கூடதலான எடை கொண்ட செயற்கைக்கோள்களை கிட்டத் தட்ட 3000 முதல் 4000 கிடோ எடைக் கொண்ட செயற்கைக்கோள்களை மார்க் 3 ராக்கெட் மூலமாகவும் ஏவி வருகிறது.

எனவே அதிக எடைக்கொண்ட செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் மிக பலமான ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை இஸ்ரோவின் பாகுபலி என விஞ்ஞானிகள் செல்லமாக அழைக்கின்றனர். இஸ்ரோவின் முதல் ராக்கெட்டான எஸ்எல்வி - 3 உயரம் 22.7 மீட்டர், 40 கிலோ எடுத்துச் செல்லும் திறன் கொண்டதாக இருந்தது. இதற்கடுத்து ஏஎஸ்எல்வி ராக்கெட் 23.5 மீட்டர் உயரமும் 150 கிலோ எடைக்கொண்ட செயற்கைக்கோள்களை எடுத்துச் சென்றது. அதன் பின்பு, இஸ்ரோ தனது முயற்சியில் ஒரே பாய்ச்சலாக பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை தயாரித்தது அவை 44 மீட்டர் உயரமும், 1860 கிலோ எடைக்கொண்ட செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. 

இஸ்ரோ விண்ணில் பல சாதனைகளை நிகழ்த்தியது பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாகத்தான். இதற்கடுத்து ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட்டுகளை தயாரித்தது. இது இஸ்ரோவின் தயாரிப்பிலேயே அதிக உயரம் கொண்டது, இது 49 மீட்டர் உயர் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. மேலும் 2200 கிலோ எடைக்கொண்ட செயற்கைக்கோளை கொண்டு செல்லும் வகையில் நவீனப்படுத்தப்பட்டது. இப்போது ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட்டை வடிவமைத்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. 

இது மார்க் 2 ராக்கெட்டைவிட உயரத்தில் குறைவு அதாவது இதன் உயரம் 43.43 மீட்டர்தான். ஆனால், 4 ஆயிரம் கிலோ வரை எடைக்கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்தும் திறனை பெற்றுள்ளது. இஸ்ரோ இன்று மூன்றாவது முறையாக மார்க் 3 ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது. இந்த ராக்கெட்டில் கடல்சார் ஆராய்ச்சி, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, உயர்நுணுக்கமான தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஜிசாட் 29 என்ற செயற்கைகோள் அனுப்புகிறது. இந்தச் செயற்கைக்கோள் 3,423 கிலோ எடை கொண்டதாக இஸ்ரோ உருவாக்கியுள்ளது.

இதற்கு முன்பு 2007 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி ஜிசாட் 19 செயற்கைக்கோளை மார்க் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஆனால் முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு ஆளில்லா விண்கலத்தை மார்க் 3 மூலம் விண்ணில் செலுத்தி முதல் முறையாக சோதனை செய்து வெற்றிப் பெற்றது இஸ்ரோ.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close