[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீதிபதி கண்முன்னே மனைவியை கத்தியால் குத்திய கணவன்! மருத்துவமனையில் மனைவிக்கு சிகிச்சை!
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.59 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி

இது தான் தேவை! தமிழ் சினிமாவில் மீண்டும் ஜொலிப்பார் பிரசாந்த்! 

the-rise-and-fall-of-tamil-actor-prashanth

இயக்குநர் சங்கரின் திரைப்பட வரிசையில் முக்கிய ஒரு இடத்தை பிடித்திருப்பது ஜீன்ஸ். அப்போதே நம்பமுடியாத கிராபிக்ஸ் காட்சிகள், உலக அழகி ஐஸ்வர்யாராய், இரட்டை வேடம், உலக அதிசயங்கள் அடங்கிய பாடல் என எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்து வெற்றிக்கனியை சுவைத்த படம். கதை எல்லாம் ரெடியாகிவிட்டது, நாயகன் தான் யார் என்பது தெரியவில்லை என்று அலைந்திருக்கிறார் சங்கர். முதலில் அப்பாஸ், பிறகு அஜித் என மூன்றாவதாக படம் போனது பிரசாந்த் கையில். அப்போது பிரசாந்த் ரொம்ப பிசியான நடிகர். கையில் ஏகப்பட்ட படங்களுடன் சுற்றுக்கொண்டிருந்த பிரசாந்த், ஜீன்ஸ் கதையை கேட்டவுடன் 7 படங்களை கைவிட்டுவிட்டு படத்தில் நடிக்க தொடங்கியதாகவும் சொல்லப்பட்டது.

ஜீன்ஸ் படம் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகர்களின் முக்கிய இடத்தை பிடித்திருந்தார் நடிகர் பிரசாந்த். இன்றைய தலைமுறையின் தல, தளபதியெல்லாம் அப்போது பிரசாந்த் என்ற நடிகருக்கு பின்வரிசையில் இருந்தவர்கள் என்றுக்கூட சொல்வார்கள். அப்படி தமிழ் சினிமாவில் வலம் வரத்தொடங்கி அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். 

வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தில் தொடங்கி சாகசம் திரைப்படம் வரை ஹீரோவாக மட்டுமே பயணம் செய்தார் நடிகர் பிரசாந்த். டாப் இயக்குநர்களான பாலு மகேந்திரா, மணிரத்னம், சங்கர் போன்றவர்களின் திரைப்படங்களின் நடித்தார். கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி, வின்னர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தங்கினார்.

2000ம் ஆண்டுக்கு பின்னர் இடைவெளிவிட்ட பிரசாந்த் பொன்னர் சங்கர் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். கடைசியாக வெளியான மம்பட்டியான் உள்ளிட்ட அவரது படங்கள் பெரிதாக ஹிட் அடிக்காததால், சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது, நீண்ட இடைவெளி பின் தனது சினிமா பயணத்தில் சிறிய மாற்றத்தை செய்துள்ளார் பிரசாந்த். அது தான் ‘வினய விதய ராமா’.

ராம் சரண், கியாரா அத்வானி நடிக்க, பொயாபதி சீனு இயக்கும் தெலுங்கு படம் ‘வினய விதய ராமா’. இப்படத்தின் டீசர் சமீபத்தில் இணையத்தில் வெளியானது. இந்த டீசர் ஆந்திராவை காட்டிலும் தமிழகத்தில் வைரலானது. அதற்கு காரணம் பிரசாந்த். டீசரில் வரும் ஒரு காட்சியில் ராம் சரண் நடந்து வருவார், அவருக்கு பின்னால் நான்கு பேர் நடந்து வருவார்கள் அதில் ஒருவர் பிரசாந்த். பிரசாந்தை தெலுங்கு டீசரில் கண்ட தமிழ் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்த போக, மற்றொரு தரப்பினர் தங்களது வருத்தத்தை பகிரத்தொடங்கினர். ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்துகொண்டிருந்த பிரசாந்துக்கு இந்த நிலைமையா என சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தனர். 

நடித்தால் ஹீரோதான், நடித்தால் ஹீரோயின் என்ற பார்வையெல்லாம் தற்போது இல்லை. இப்போதெல்லாம் ஹீரோவுக்குத்தான் மவுசு என்பதெல்லாம் இல்லை. படங்களை மக்கள் கவனிக்கிறார்கள். ஒவ்வொருவரின் தனித்திறமையும் இங்கு கொண்டாடப்படுகிறது. ஒரு காட்சியில் வந்தாலும் படத்தை தாங்கிப்பிடிக்கும், ரசிகர்களின் மனதில் தங்கிவிடும் எத்தனையோ கதாபாத்திரங்களை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நல்ல நடிகர்கள் ஒரேயடியாக ஒதுங்கிவிடுவதுதான் வருத்தம். அவர்கள் சினிமாவில் தங்களது வருகையை பதிவுசெய்துகொண்டே இருக்க வேண்டுமென்றே சினிமா ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இன்றைய தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத அம்மாவாக இருக்கும் சரண்யா, ஸ்டைலிஸ் வில்லன் அரவிந்தசாமி எல்லாரும் தன்னுடைய ரீ எண்ட்ரி மூலம் தமிழ் சினிமாவில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நம் சாக்லெட் பாய் பிரசாந்தும் இணையட்டும். தமிழ் சினிமாவில் அவர் மீண்டும் வலம் வர வேண்டும். அவர் ஒரு நல்ல நடிகர், நிச்சயம் வலம் வருவார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close