[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு

ஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா ? கொஞ்சம் உஷாரா இருங்க

are-you-travelling-from-ooty-to-masinakudi-via-kallhati-route-beware

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அரசி ஊட்டி, அப்படிப்பட்ட ரம்மியமிக்க இயற்கை அரசியின் மடியில் இருக்கும் காட்டுப் பகுதிதான் மசினகுடி. முதுமலை வனச் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றாக மசினகுடி அமைந்துள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா வரும் பெரும்பாலானோர் முதுமலை மற்றும் மசினகுடிக்கு ஒரு விசிட் அடிப்பார்கள். முதுமலை புலிகள் சரணாலயத்தில் தனியார் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் வனத்துறை சார்பாகவே யானை மற்றும் வேன்களில் சூழல் சுற்றுலாவை ஏற்பாடு செய்து வருகிறது. இந்தச் சூழல் சுற்றுலாவில் முதுமலை காட்டுப் பகுதிக்கு உள்ளே சென்று வன விலங்குகளை பார்க்கலாம்.

இதில் மசினகுடி வனப்பகுதியில் தனியார் சுற்றுலா உண்டு. அதில் தனியார் ஜீப்புகளில் குறிப்பிட்ட நேரத்துக்கு வனத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுலா சென்று விலங்குகளின் நடபாட்டத்தை பார்வையிடலாம். மேலும், மசினகுடி, தெப்பக்காடு ஆகியப் பகுதிகளில் தனியார் தங்கும் விடுதிகளும் ஏராளமாக இருக்கின்றன. எனவே முதுமலைக்கு சுற்றுலா செல்வதை விட அதன் அருகே இருக்கும் மசினகுடியில் சென்று தங்கி ஓய்வெடுக்கவே சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனர். ஆனால், பல நேரங்களில் தங்களது இன்பமான சுற்றுலாப் பயணம் சோகமாக முடிவதும் உண்டு.

இப்போது கூட ஊட்டி அருகே மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் பலியானார்கள். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய 2 பேர் மீட்கப்பட்டனர். இந்த 7 பேரும் கடந்த 30 ஆம் தேதி காரில் ஊட்டிக்கு சென்றார்கள். ஊட்டியில் தங்கிய அவர்கள் 7 பேரும், அக்டோபர் 1 ஆம் தேதி காலை விடுதியில் இருந்து ஊட்டி அருகே உள்ள மசினகுடி பகுதியை சுற்றிப்பார்க்க காரில் புறப்பட்டனர்.அவர்கள் கல்லட்டி மலைப்பாதையில் புதுமந்து பகுதியில் உள்ள 35-வது கொண்டை ஊசி வளைவில் சென்றுகொண்டு இருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் உள்ள 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டபடி சென்றது. இதனால் காருக்குள் இருந்த 7 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். அதில் 5 பேர் பலியான நிலையில் 2 பேர் மீட்கப்பட்டனர்.

கல்லட்டி ரூட்டில் ஜாக்கிரதை !

ஊட்டியில் இருந்து முதுமலை, மசினகுடி பகுதிக்கு செல்ல இரண்டு சாலைகள் இருக்கின்றன. அதில் ஒன்று கூடலூர் வழியாக மைசூர் செல்லும் சாலை. அதில் பயணம் செய்தால் 68 கி.மீ. தூரத்தில் மசினகுடி, முதுமலைக்கு சென்றுவிடலாம். இது மைசூர், பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலை என்பதால் லாரி, பஸ் என எந்த வாகனத்துக்கும் தடையில்லை. மற்றொரு சாலை ஒன்று இருக்கிறது அதுதான் 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட 38 கி.மீ. இல் இருந்து 40 கி.மீ. தூரத்தில் மசினகுடிக்கு சென்றுவிடலாம். இந்தப் பகுதியில் கார் மற்றும் டூவீலர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது. லாரி, வேன், பஸ், மினி பஸ் போன்ற வாகனங்களுக்கு அனுமதியில்லை. இந்தச் சாலை மிகவும் குறுகியதாகவும், 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டிருப்பதாலும் வாகனங்களை இயக்குவது மிகவும் சிரமமானது.

அதேபோல் பயணத்தின் போது உடல் உபாதையும் ஏற்படும். ஆனால் இளைஞர்கள் நன்றாக வாகனம் ஓட்டத் தெரிந்தவர்கள், மிக முக்கியமாக மலைப் பகுதிகளில் லாவகமாக வாகனம் ஓட்டுபவர்களே கல்லட்டி சாலையை அதிகம் பயன்படுத்துவர். ஊட்டியில் இருந்து சீக்கிரம் மசினகுடிக்கு சென்று திரும்பிவிடலாம் என நினைப்பவர்களால்தான் இந்தச் சாலையில் விபத்து ஏற்படுவதற்கு காரணம் என வனத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கல்லட்டி சாலையில் "பைசன் வியூ பாயின்ட்" பகுதிகளில் எல்லாம் விபத்து ஏற்பட்டால் உடலை கண்டுபிடிக்கவே நாள்கள் ஆகிவிடும் என்றும் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்தப் பகுதியில் யானை, புலி, காட்டெருமை, சிறுத்தை நடமாட்டமும் மிக அதிகம். ஊட்டியில் இருந்து கல்லட்டி வழியாக மசினக்குடி செல்லும் சாலை இறக்கமாகவும், அங்கிருந்து ஏறும் சாலை செங்குத்தாகும் இருக்கும். இதனால் வாகனத்தை சரியாக ஓட்டத் தெரியாதவர்களால் வாகனங்களும் பழுதாகும். அப்படி பழுதானால் நீங்கள் அடற்காடு நிறைந்த சாலையில் நிற்க நேரிடும். அது யானை மற்றும் சிறுத்தை நடமாடும் பகுதியாக இருக்கும். இதனையெல்லாம் கருத்தில் கொண்டே கல்லட்டி சாலையில் வாகனப் போக்குவரத்து காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close