[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

ஆப்பிள் அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன?: திடுக்கிடும் தகவல்கள் 

400-metre-mystery-in-lucknow-shooting

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டிந்த கான்ஸ்டபிள் நிற்காமல் சென்ற காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். காரை ஓட்டிச் சென்ற ஆப்பிள் நிறுவன ஊழியர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், சற்று தூரம் காரினை ஓட்டிச் சென்று சாலையில் இருந்த  தடுப்புச் சுவரில் மோதியுள்ளார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் கான்ஸ்டபிள், துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. 

          

1.20 மணி: விவேக் திவாரி தனது சக ஊழியர் சனா கானு உடன் பணி முடிந்து தன்னுடைய எஸ்யுவி ரக காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கோமதி நகர் பகுதியில் உள்ள விபுதிகாந்தில் உள்ள வாடிக்கையாளர் அலுவலகத்தில் மீட்டிங்கை முடித்து சனாவை வீட்டில் விட்டுவிட்டு செல்ல நினைத்து கிளம்பினார்.

1.29 மணி : விவேக் தனது மனைவிக்கு போன் செய்து தன்னுடைய சக ஊழியர் சனாவை வினய்காந்த் பகுதியில் உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு அரைமணி நேரத்தில் வீட்டிற்கு வருவதாக தெரிவித்திருக்கிறார்.

1.30 மணி : கோமதிநகர் எக்ஸ்டன்சன் பகுதியில் உள்ள மக்தூம்பூரில் உள்ள போலீஸ் வாகன சோதனைப் பகுதியை கடந்தார். அங்கு பிரசாந்த் குமார் மற்றும் சந்தீப் குமார் ஆகிய இரண்டு கான்ஸ்டபிள்கள் காரை இடைமறித்துள்ளனர். காரை நிறுத்துமாறு கூறியுள்ளனர். காரை பின் தொடர்ந்து கான்ஸ்டபிள்கள் இருவரும் வந்தார்கள். பின்னாள் அமர்ந்திருந்த கான்ஸ்டபிள் தனது லத்தியால் காரினை அடித்தார். திவாரி மெதுவாக காரினை ஓட்டினார்.

1.35 மணி : மற்றொரு கான்ஸ்டபிள் பிரசாந்த் குமார் காரினை ஓவர் டேக் செய்து 200 மீட்டர் முன்னாள் நடுரோட்டில் நிறுத்தினார். காரினை நிறுத்துமாறு விவேக்கை பார்த்து கையசைத்துள்ளார். கார் கிட்டே நெருங்கி கடக்க முயன்றது. பிரசாந்த் தன்னிடம் இருந்த .9 மிமீ ரிவால்வரால் விவேக்கை குறிபார்த்து சுட்டார். கார் முன்பக்க கண்ணாடியில் துப்பாக்கி குண்டு புகுந்து விவேக்கின் கழுத்துப் பகுதியில் பாய்ந்தது. விவேக் தனது டிரைவர் சீட்டில் இருந்து சரிந்து விழுந்தார். இருப்பினும், கார் 350 மீட்டர் சென்றது.

2.00 மணி : சனா எப்படியோ வாகனத்தில் இருந்து வெளியேறினார். அந்த வழியாக வந்த வாகனங்களை உதவிக்கு அழைத்தார். சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் வாகனம் ஒன்று வந்தது.

2.15 மணி : விவேக் மற்றும் சனா இருவரும் அருகில் உள்ள லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சையின் போது திவாரி உயிரிழந்தார். 

2.35 மணி : சனா அருகில் உள்ள கோமதிநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். நடந்ததை எல்லாம் மூத்த அதிகாரிகளிடம் சனா கூறியிருக்கிறார். இதற்கிடையில், விவேக் மனைவி கல்பனா அவரது மொபைலுக்கு போன் செய்துள்ளார். யாரும் எடுக்கவில்லை.  

         

3.00 மணி : இறுதியாக, மருத்துவமனையில் இருந்துதான் கல்பனாவின் போனை எடுத்துள்ளார்கள். உங்கள் கணவருக்கு லேசாக காயம் ஏற்பட்டுள்ளது, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளார்கள்.

3.15 மணி : கல்பனா உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்த்த கல்பனா தன்னுடைய கணவரின் காரில் புல்லட் குண்டு பாய்ந்திருப்பதை பார்த்துள்ளார். அப்போது, “சுடுவதற்கு உங்களுக்கு யாருக்கு அனுமதி கொடுத்தார்கள்?. சட்டத்தின் ஆட்சி  இதுதானா?”என்று கண்ணீர் மல்க கோபத்துடன் கேட்டுள்ளார் கல்பனா. 
 
4.35 மணி : போலீசார் சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிள் மீது சனா அளித்த தகவலின் அடிப்படையில் கொலைக் குற்ற வழக்குப் பதிவு செய்தனர். 

  
 
எழும் சந்தேகங்கள்:-

இந்தச் சம்பவத்தில் பல்வேறு குழப்பம் நிலவி வருகிறது. துப்பாக்கியால் சுட்ட போலீஸ் கான்ஸ்டபிள் அளித்த தகவலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் சுமார் 400 மீட்டர் தொலைவு காரினை விவேக் ஓட்டிச் சென்று, பின்னர் சாலை தடுப்புச் சுவரில் மோதியதாக கூறியுள்ளார். விவேக் உடன் வந்த சனா வெறும் 10 மீட்டர் மட்டுமே சுட்ட பிறகு சென்று தடுப்புச் சுவரில் மோதியதாக கூறியுள்ளார். 

விவேக்கை பரிசோதனை செய்த லோஹியா மருத்துவமனை மருத்துவர் ராம் மனோகர், ‘மார்பில் புல்லட் பாய்ந்த யாராலும் 5 மீட்டருக்கு மேல் காரினை ஓட்ட முடியாது” என்று கூறியுள்ளார். 

விவேக் துப்பாக்கியால் சுடப்பட்ட இடத்திற்கும், அவர் கார் தடுப்புச் சுவரில் மோதிய இடத்திற்கும் இடையில் இரண்டு வளைவுகள் இருக்கிறது. அதனால், நிச்சயம் காயம் பட்ட விவேக்கால் அந்தத் தூரத்தை காரினை ஓட்டி கடந்து இருக்க முடியாது என்று கூறப்படுகிறது. அதனால், கார் எப்படி 400 மீட்டர் தூரம் சென்று இருக்கும் என்பது தெளிவுபெறாமலே உள்ளது. 

இந்த இடத்தில்தான் கல்பனா ஒரு சந்தேகத்தை எழுப்புகிறார். துப்பாக்கியால் சுட்ட போலீசாரே காரினை ஓட்டிச் சென்று தடுப்புச் சுவரில் மோதிவிட்டு விபத்தாக காட்ட முயற்சித்து இருக்கலாம் என கூறுகின்றார். 

       

துப்பாக்கியால் சுட்ட போலீஸ் சவுத்ரி, “நாங்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, விவேக் கார் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தது. அதில், விவேக் மற்றும் காரில் இருந்த பெண் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். எங்களை மோதிவிட்டு காரினை எடுக்க முயன்றதால் சுட்டோம்” எனக் கூறியுள்ளார். இதற்கு தன்னுடைய கணவர் நற்பெயரை களங்கப்படுத்த போலீசார் முயற்சிப்பதாக மனைவி கல்பனா கூறியுள்ளார். 

இதனால், கார் எப்படி 400 மீட்டர் தூரம் சென்றது என்பது இன்னும் தீர்க்கப்படாத கேள்வியாக உள்ளது. இதனால், என்ன நடந்திருக்கும் என்பதுகுறித்து விசாரணையில் தெரிய வர வாய்ப்புள்ளது.

       

இதனிடையே, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விவேக் மனைவி கல்பனாவை அழைத்து  சந்தித்துள்ளார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார். பின்னர், உயிரிழந்த விவேக் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ25 லட்சம் அறிவிக்கப்பட்டது. அதேபோல், குழந்தைகள் கல்விக்கு ரூ5 லட்சம், அவரது வயதான அம்மாவின் கவனிப்புக்கு ரூ5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close