[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை
  • BREAKING-NEWS சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை
  • BREAKING-NEWS சபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா

அது என்ன மக்னா யானை ?

what-is-makhna-elephant-what-are-all-the-rumours-spread-about-the-giant-species-let-s-undersand

மாதம் ஒரு முறையேனும் நாளிதழ்களிலும், காட்சி ஊடகங்களிலும் மக்னா யானை குறித்த செய்தியை எப்போதும் நாம் படித்திருப்போம். முக்கியமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒற்றை மக்னா யானை சுற்றுகிறது, கிராம மக்கள் அச்சம் போன்ற செய்திகள் மிகவும் பிரபலம். தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி போன்ற பகுதிகளில் மக்னா யானை மிகவும் பிரபலம். உலகில் யானைகளில் இரண்டே வகைகள்தான் உள்ளது. ஒன்று ஆசிய யானை மற்றொன்று ஆப்பிரிக்க யானை.

Read Also -> முதலை, பாம்புகளோடு வாழும் விசித்திர மனிதன்  

ஆனால் உலகளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆப்பிரிக்க யானைகள் எண்ணிக்கை குறைவாகவும் ஆசிய யானைகள் எண்ணிக்கையில் மிக அதிகம். அதுவும் இந்தியாவில் குறிப்பாக தென்னகத்தில் யானைகள் அதிகம் இருப்பதாக 2016 இல் நடத்தப்பட்ட ஆய்வின் தகவல் தெரிவிக்கிறது. அதேபோல மக்னா வகை யானைகள் எண்ணிக்கையும் தென்னக்ததில்தான் அதிகம். மக்னா யானைகளை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிக சர்வசாதாரணமாக பார்க்கலாம்.

Read Also -> பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட காவலர்: வைரலாகும் வீடியோ

மக்னா யானை என்றால் ? 

மக்னா யானை என்றால் கூறப்படும் பொதுவான கருத்தொன்று நிலவுகிறது. அதில் "மனிதர்களில் சிலரைப் போல மூன்றாம்பாலினமாக பிறந்த யானைகள்தான் மக்னா எனப்படுகின்றது" என பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மூன்றாம் பாலினம் யானைதான் மக்னா என்பது தவறான புரிதல். இந்தப் புரிதலில் முன்னோடியாக இருப்பவர்கள் காட்டில் வாழும் மக்கள்தான். காடுவாழ் மக்கள் தந்தங்கள் இல்லாத ஆண் யானையை மோல யானை அல்லது மோழ யானை என்கிற பெயரில்தான் குறிப்பிடுவார்கள். இன்றும் பல கிராமப் பகுதிகளில் கொம்புகளற்ற ஆடுகளையும், மாடுகளையும் மோழையாடு என்றும் கூறுவதை காணலாம். மரபணு குறைபாட்டால் தந்தம் வளராத தன்மையோடு பிறக்கும் ஆசிய ஆண்யானைகள் தான் "மக்னா" எனப்படுகிறது.  

Read Also -> புற்றுநோயால்கூட பிரிக்க முடியாத சச்சினின் காவியக் காதல்

பெண் யானைகள் விரும்பாத மக்னா !

ஆசிய யானைகளில் குறிப்பாக இந்திய யானைகளில், தந்தமுடைய ஆண் யானைகளையே பெண் யானைகள் இணையாக விரும்பி ஏற்றுக்கொள்ளும் என்கிறார்கள். தந்தமற்ற நிலையில் எந்த யானைக் கூட்டத்தினோடும் இவற்றால், தாக்குப்பிடித்து வாழ முடியாதநிலை ஏற்படுகிறது. தந்தங்கள் ஆண்யானைகளின் வலிமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு முக்கியமான ஆயுதம். தந்தமில்லாமல் இவற்றால், எந்தக்கூட்டத்திலும் சேர்ந்து ஒரு முழு ஆண் யானையின்  தன்மையோடு குழுவில் இருக்க முடியாததால் இவை மூர்க்கத்தனத்தோடு இருந்து பல சமயங்களில் எதிர்ப்படும், மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் தாக்கும் குணம் கொண்டவையாகும் இருக்கும் என்கிறார்கள் யானை ஆர்வலர்கள். இப்படி மூர்க்கத்தனமானது என்றும் பலரையும் கொன்றதாக சொல்லக்கூடிய மக்னா கூட பிடித்து முகாம்களில் வளர்த்த போது இயல்பாகவும் இருந்துள்ளது.

Read Also -> யுடியூப்பில் 50 லட்சத்தை தாண்டிய ‘சின்ன மச்சான்’ பாடல்: அம்ரீஷ் ஹேப்பி 

யானையின் தந்தங்கள் ஏன் எதற்கு ?

ஒரு யானையின் தந்தங்கள் என்பது அதன் முன்வெட்டுப் பற்களே. ஒரு ஆண் யானையின் தந்தங்கள் மூன்றில் இரண்டு பங்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். மீதமுள்ள ஒருபங்கு மண்டையோட்டின் உள்ளே பற்குழிகளுக்குள்ளாக பொருந்தியிருக்கும். ஆசிய யானைகளைப் பொறுத்தவரை, இந்திய யானைக்கு மட்டுமே தந்தம் வெளியே  நீண்டு வளரும். பெண் யானைக்குக் கூட, வாய்க்குள் அடங்கிய சிறு தந்தம் இருக்கும். ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டிற்கும் தந்தங்கள் உண்டு என்றாலும், மனிதர்களால் தந்தங்களுக்காக நடந்தப்படுகிற யானை வேட்டைகளின் காரணமாக தற்போது ஆப்பிரிக்க யானைகளிடையே, தந்தங்களற்று பிறக்கும் பண்பு  மேலோங்கி வருவதாக சில ஆய்வுகள் கூறுகிறது. 

மக்னாதான் பிரம்மாண்டம் !

தந்தமுள்ள ஆண் யானையை விட, மக்னாவுக்கு தலைப்பகுதியும், நெற்றிப் பகுதியும் நன்கு பெரிதாக இருக்கும். வாலிற்குக் கீழே சற்று புடைத்த நிலையிலிருக்கும் தோற்றத்தையும் காணலாம். பெண் யானைக்கு அந்த இடம் உள் வாங்கி குழி போன்ற அமைப்பில் இருக்கும். மக்னாவானது, சாதாரணமான ஆண் யானைகளை விட, பலமுள்ளதாகவும், கொஞ்சம் பெரியதாகவும் காணப்படும். இது, தந்தத்தின் வலிமையை ஈடு செய்யும் வகையில், உடல்வலிமை கூடியதான உடலமைப்பை இயற்கை கொடுத்திருக்கிறது.

Read Also -> நடிகை நிலானி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

ஏன் தனிமையில் இருக்கிறது மக்னா ?

ஆண் யானை என்றாலே அதன் கம்பீரமான தந்தம்தான் முதலில் நமக்கு நினைவில் வரும் ஆனால் அந்த தந்தமற்றுப் பிறப்பதினாலேயே மக்னாவில் நிலை மிகப் பரிதாபமாக இருக்கிறது. பலமுள்ள ஆண்யானைகளே பெண்யானைகளோடு இணைசேரமுடியும். பல நேரங்களில்  பலத்தைக்காட்ட போட்டியாளர்களுடன் சண்டையிட்டுத்தான் பலத்தைக் காட்டியாக வேண்டும். தகுதியானவையே தப்பிப்பிழைக்கும் என்கிற விதியின்படி, போட்டியில் வெல்ல தந்தமும்  மிக முக்கிய ஆயுதம். தந்தமற்ற இவைகள், பெரும்பாலும் எல்லாக் கூட்டங்களிலும் விலக்கியே வைக்கப்படுகின்றன என்கிறார்கள் விலங்கியல் ஆர்வலர்கள். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close