[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு

'என்னாது 10 விக்கெட் எடுப்பியா' வாய்விட்ட பாக்.வீரரை வறுத்தெடுத்த மீம்ஸ்கள்

pakistan-fast-bowler-trolled-after-teams-defeat-with-india-for-his-earlier-comment-before-the-match

6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தத் தொடரின் தகுதிச்சுற்றுகளில் இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் தோல்வியடைந்து வெளியேறிவிட்டன.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால், இந்தியாவின் மிகப் பிரமாதமான பந்து வீச்சின் காரணமாக பாகிஸ்தான் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா, ஷிகர் தவாண் ஆகியோரின் சிறப்பான பேட்டிங் காரணமா 29 ஆவது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது.

இந்த வெற்றியை சமூக வலைத்தளங்களில் இந்திய ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த மீம் கிண்டல்களுக்கு வழி கொடுக்கும் வகையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி "இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த ஆசைப்படுகிறேன்" என பேட்டி கொடுத்திருந்தார்.

ஆனால் நேற்றையப் போட்டியில் ஹசன் அலி பவுலிங்கை ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் சிதறடித்தார்கள். 4 ஓவர்களை வீசிய ஹசன் அலி 33 ரன்களை கொடுத்தார். போட்டிக்கு முன்பு வாய்விட்டு மாட்டிக்கொண்ட ஹசன் அலியை கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

மேலும் சென்ற ஆண்டி நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தைதான் பாகிஸ்தான் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து பெருமையாக பேசி வருகின்றனர். ஏனென்றால் அந்த இறுதிப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது.

நேற்றைய போட்டியின் தோல்வியை மறக்க பாகிஸ்தான் ரசிகர்கள் தொடர்ந்து சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி ஹைலைட்ஸ் ரசித்துக்கொண்டு இருக்கின்றனர்.

அதேபோல இந்தியாவுடனான போட்டியில் ஹாங்காங்கின் முதல் விக்கெட் 174 ரன்களுக்குதான் விழுந்தது. ஆனால், பாகிஸ்தான் 162 ரன்களுக்குள்ளாகவே அனைத்து விக்கெட்டும் இழந்தது. இதனால் ஹாங்காங் ரசிகர்கள் பாகிஸ்தானை கிண்டலடித்து வம்புக்கு இழுப்பது போல மீம்களும் பறக்கிறது.

அதேபோல ஹாங்காங்கிடம் விக்கெட் எடுத்த திணறிய இந்தியா, எப்படி பாகிஸ்தானை விரட்டியது ? எங்க கேரக்டரை புரிஞ்சுக்க மாட்டீயே என சொல்லும் மீம்களும் பறக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close