[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

101 வயதில் தினமும் 12 மணிநேரம் உழைக்கும் ஒரு இந்திய பெண் மருத்தவர்

a-woman-of-many-firsts-meet-india-s-first-and-oldest-cardiologist

101 வயதில் ஓய்வில்லாமல் இன்றும் உழைத்து வருகிறார் இந்தியாவின் முதல் இருதய பெண் மருத்துவர். 

பத்மாவதியை இன்றும் பலருக்கு தெரியாது. ஆனால் மலையளவு சாதனை செய்த பெண்மணி. உலகமே உற்று பார்க்கும் இந்திய மருத்துவர். சரியாக சொன்னால் இந்தியாவின் முதல் இருதய சிகிச்சை மருத்துவர். டாக்டர் பத்மாவதி சிவராமகிருஷ்ண ஐயருக்கு இந்த வருடம் ஜூன் மாதம் 20 ஆம் தேதியோடு 100 வயது முடிந்துவிட்டது. இந்த வயதிலும் மிக ஆரோக்கியமாக மருத்துவ பணி செய்து வருகிறார். அவ்வளவு ஏன் தினமும் 12 மணி நேரம் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார்.

“நான் இருதய மருத்துவத்துறையை தேர்வு செய்த போது பெண்களுக்கு என்று ஒருசில படிப்புக்களே இருந்தன. ஆனால் இன்று அப்படியில்லை” என மிக எளிமையாக தனது வாழ்க்கை அனுபவங்களை கடந்து செல்கிறார். மலைக்க வைக்கும் அளவுக்கு சிரமங்கள் உள்ள காலத்தில் ஒரு பெண் இருதய மருத்துவராக வந்துள்ளதை ஒருசில சொற்களில் மூலம் விளங்க வைத்து முடியாது. பத்மாவதிக்கும் தமிழ்நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அது என்ன?

1917ல் பிறந்த டாக்டர் பத்மாவதி பிறந்தது என்னவோ பர்மாவில். 1941ல் இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தக் காலத்தில் இவரது குடும்பம் பர்மாவைவிட்டு தமிழகத்திலுள்ள கோயமுத்தூருக்கு தஞ்சம் புகுந்தது. அந்தத் துயரங்களை துடைத்துக் கொண்டு இவர் மருத்துவம் படிப்பதாக முடிவு செய்தார்.  அதன்படி அமெரிக்காவிலுள்ள ஜான்ஸ் ஹோப்கின்ஸ் மருத்துவமனை மற்றும் ஹார்வர்ட் வைட் உடன் பயின்றார். அந்தக் காலத்தில் ஒரு பெண் அமெரிக்காவிற்கு சென்று மருத்துவம் படிப்பது பெரும் சவாலானது. அதுவும் இவரது சமூகத்தில் இந்த முடிவை எடுத்திருப்பது வியக்கத்தக்கது. அதை பத்மாவதி செய்து காட்டினார். 1952ல் இவர் இந்தியாவிற்கு திரும்புவதற்கு முடிவு செய்த போது அது இந்திய இருதய மருத்துவத்துறைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

அதன் பிறகு இவர் டெல்லியிலுள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் முதல் இருதய க்ளினிக் மற்றும் பரிசோதனை லேப்பை தொடங்கினார். இந்தியாவில் கார்டியாலஜி துறையில் முதல் டாக்டர் பட்டம் பெற்றவர் என்ற பெருமை இவரை இன்னும் கூடுதலாக உழைக்க வைத்தது. மெளலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் கார்டியாலஜி துறையை உருவாக்கினார். மேலும் அகில இந்திய ஹார்ட் ஃபவுண்டேஷனை தனியாக நிறுவினார். இவை மட்டுமல்ல; இன்னும் இவரது சேவைகளின் பட்டியல் நீண்டு கொண்டு வருகின்றன. ஒரு பெண்னை மருத்துவத்துறைக்குள் அனுமதிக்கவே தயங்கிய காலகட்டத்தில் இத்தனை பணிகளையும் தனிப் பெண்ணாக பத்மாவதி செய்து முடித்தது பெரும் சாதனை.  

ஆகவேதான் பத்மாவதியை இந்திய தேசம் மரியாதை செய்தது. 1967ல் ‘பத்மபூஷன்’, 1992ல் ‘பத்மவிபூஷன்’ என இவரது பணிகளை பாராட்டி பல விருதுகளை இவருக்கு வழங்கியது. 

“நம் சிந்தனை ஆரம்பக்காலத்தில் வேறாக இருந்தது. நாம் கடந்த நூற்றாண்டில் உடல்ரீதியாக வலுமையாக இருந்தோம். சத்தான உணவை உட்கொண்டோம். ஆனால் இன்றைய உலகம் மாறிவிட்டது” என்கிறார் இந்த 100 வயதை கடந்த மருத்துவர். பர்கர், துரித உணவு போன்றவற்றை உட்கொண்டுவிட்டு எட்டு மணிநேரம் கம்ப்யூட்டர் முன்னாலேயே உட்கார்ந்துள்ளோம். இது நல்லதல்ல என்பது இவர் செய்தி. இன்றைய மாடர்ன் உலகத்தில் இதய நோய் என்பது மிகப் பெரிய உயிர்க்கொல்லி. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி ஆண்டுக்கு 17 மில்லியன் பேர் இதய நோயினால் இறக்கிறார்கள். 2030ல் இந்த அளவு 23 மில்லியனாக உயரும் எனக் கூறுகிறது. இந்த எண்ணிக்கையில் கொடூரமான 32 சதவீத பதின்பருவத்தினர் இறக்கக்கூடும் என்கிறார்கள். 

எதனால் இந்த இதயநோய் ஏற்படுகிறது? “இதய நோய் ஏற்படுவதற்கான மிகப் பெரிய காரணி, ஹைப்பர்டென்ஷன்தான். சர்க்கரை வியாதி மற்றும் போதைப் பொருள் உபயோகம். கூடவே இரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு கலப்பதாலும் இந்த நோய் ஏற்படுகிறது. இரத்தத்தில் கொழுப்புக் கூடக்கூட அது ரத்தநாளங்கலில் போய் தங்கி, இரத்தக் கொதிப்பு வருகிறது. அதனால் இருதயம் தனது வலிமையை இழக்கிறது. இதன் உடன் அதிக அளவு உப்பு எடுத்துக் கொள்வதாலும் இரத்த அழுத்தம் அதிகரித்து இதயம் செயல் இழக்கநேரிடுகிறது. 

உலக சுகாதார அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு இந்தியனுக்கும் 2.3 கிராம் மேல் சோடியம் வரும் காலங்களில் கிடைக்காது என்கிறது. ஆனால் நாம்  இப்போதைக்கு இதில் இரண்டு மடங்கை உட்கொண்டு வருகிறோம். மேலும் இரத்ததில் சர்க்கரை கூடுவதாலும் இதய நோய் வருகிறது. ஒரு நாளைக்கு 36 கிராம் அளவே சர்க்கரையை பன்படுத்த வேண்டும் என்கிறது அமெரிக்கன் ஹார்ட் அசோசேஷன். அப்படியென்றால் ஒருநாளைக்கு ஒரே ஒரு ரசகுல்லாதான சாப்பிட வேண்டும்.

இவ்வளவு ரிஸ்க் ஆன ஒருதுறையில் தாம் இருப்பதை உணர்ந்ததால்தான் பத்மாவதி இன்றும் தினமும் 12 மணிநேரம் மருத்துவராக உழைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் தனியாக எழுதிதான் ஆக வேண்டுமா? 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close