[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
  • BREAKING-NEWS தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரோகித் சர்மா அசத்தல் சதம். போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது முதல்நாள் ஆட்டம்
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

ரூ.2,500-க்கு வாஷிங் மெஷின் : நடுத்தர மக்கள் குஷி

lowest-price-washing-machine-introduced-in-kovai

கிரைண்டர் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக குறைந்த விலையில் வாஷிங் மெஷின் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

தொழில் நகரமான கோவையில் தனியார் நிறுவனம் ஒன்று, குறைவான விலையில் வாஷிங் மெஷினை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 

கோவையில், டேபிள் டாப் வெட் கிரைண்டர் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருபவர் ரத்தினபுரியை சேர்ந்த முருகேசன். வெட் கிரைண்டர் விற்பனையில் தொய்வு ஏற்பட்டதால், அதனுடன் சேர்ந்து வேறு ஏதாவது புதிதாக ஒன்றை முயற்சித்துப்பார்க்க களமிறங்கினார். ஒன்றரை ‌ஆண்டுகள் முயற்சியின் முடிவில், அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய வாஷிங் மெஷினை தயாரித்துள்ளார் முருகேசன்.

இந்த வாஷிங் மெஷின் விலை குறைவு என்றாலும், தரத்திலும், வசதிகளிலும் மற்ற நிறுவனத்தின் வாஷிங் மெஷினுடன் எந்த வகையிலும் தங்கள் வாஷிங் மெஷின் குறைந்தது அல்ல என்று உறுதிபடச் சொல்கிறார் முருகேசன். வாஷிங் மிஷினின் விலை 2 ஆயிரத்து 500 ரூபாய், ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து இதன் விலை 2 ஆயிரத்து 950 ரூபாய். குறைந்த விலை வாஷிங் மெஷினுக்கு கோவை பகுதியின் நடுத்தர ‌இல்லத்தரசிகளிடம் மிகுந்த‌ வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்லும் வாஷிங் மெஷின்களுக்கு ஓர் ஆண்டு வாரண்டியும் அளிக்கப்படுகிறது. பணம் செலுத்திவிட்டு, விலாசத்தை தெரிவித்தால் குறைந்த விலை வாஷிங் மெஷின் வீடு தேடி வரும் ‌என்கின்றனர் அதனை உற்பத்தி செய்யும் நிறுவனத்தினர். 

மேலும் இந்த வாஷிங் மெஷின் 7 நிமிடத்தில் துணி துவைத்து முடித்துவிடும் என்றும் "எந்த இடத்திற்கும் எளிதில் மாற்றி விடலாம்" என்றும் வாஷிங் மெஷின் தயாரிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

தகவல்கள் : சுரேஷ்குமார் ,செய்தியாளர்- கோவை

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close