[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

'கடவுளின் தேசம் அழியும்' என முன்பே எச்சரித்த சமத்வம்!

samathwam-a-short-film-reflects-current-situation-of-kerala

கேரள மாநிலமே நிலச்சரிவு, மழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் அழியும் என 6 மாதங்களுக்கு முன்பே அம்மாநில மக்களுக்கு திரையிடப்பட்டுள்ளது. 

அண்டை மாநிலமான கேரளா, நூறாண்டுகளில் இல்லாத மழை, வெள்ளத்தால் இந்தாண்டு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை சந்தித்தது. எழில் கொஞ்சும் சுற்றுலா தளம், கடவுளின் தேசம் என கூறப்படும் கேரள மாநிலமே கடந்த மாதம் வெள்ளத்தில் தத்தளித்து வேதனையான விஷயம்தான். ஒரு மாதமான நிலையிலும் கேரளாவில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுதான் கொண்டிருக்கின்றன. 

வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி, வீடு வாசல்களை இழந்து, பல பேர் மாயமான சோக நிகழ்வுகள் மலையாள தேசத்தில் அரங்கேறின. கேரளாவில் பெய்த மழையால் 300 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வெள்ளம் வடிந்த நிலையிலும் உருக்குலைந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான வீடுகள், மின்சாரம், தகவல் தொடர்பு துண்டிப்பு, போக்குவரத்து சேவைகள் முடக்கம், முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலாத் தொழில் முற்றிலும் பாதிப்பு என எண்ணிலடங்கா சேவைகள் இன்னும் கேரள மக்களுக்கு கிடைத்தபாடில்லை. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்றுவருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

மலையாள தேசமே மழையில் தத்தளிக்கும் என யாருமே நினைத்து பாத்திருக்க மாட்டோம். ஆனால் இதெல்லாம் முன்பே தெரிந்த விஷயம்தான் என அசால்ட்டாக பதிலளிக்கின்றனர் கேரள மக்கள். இப்படியொரு இயற்கை சீற்றம் கேரளாவை தாக்கும் என 6 மாதத்திற்கு முன்பே குறும்படம் ஒன்றை எடுத்திருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த அனில் நாயர். 'சமத்வம்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குறும்படத்தின் தொடக்கமே பயங்கர இடி மழையுடன் தொடங்குகிறது. இன்று கேரளாவில் எந்தெந்த பகுதிகள் எல்லாம் அளிந்ததாக காட்டப்பட்டதோ அந்த காட்சிகள் அனைத்துமே படத்திலும் காட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திகிறது. 6 மாதத்திற்கு முன் நடக்கவுள்ளதை இப்போது திரையிட்டு காட்டினால் எப்படி இருக்கும் அதே போன்ற உணர்வு இந்த படத்தை பார்க்கும்போது ஏற்படுகிறது. படம் உண்மையாகும் என தெரிந்திருந்தால் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்கலாமே என்பது பல கேரள மக்களின் மைண்ட் வாய்ஸ்!

மகனை தொலைத்த தாய், பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகள் என படம் முழுக்க உண்மை நிகழ்வுகளை பிரதிபலித்து பார்ப்பவர்களை துடிக்கவைக்கிறது. தூங்கிக் கொண்டிருக்கும் போது வீடு முழுக்க வெள்ளம் வரும் காட்சிகள், வெளியே வரமுடியாமல் தவிக்கும் அவலம், ஆங்காங்கே நிலச்சரிவு என மக்களின் இயல்பு வாழ்க்கை திருப்பிப்போட்ட பேரதிர்வுகளை அப்படியே திரையிட்டு காண்பித்துள்ளது. அதிலும் முத்தாய்ப்பாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்புப்படையினர் எவ்வாறு மீட்கப்பட்டனரோ, அதேபோன்ற காட்சிகள் 6 மாதத்திற்கு முன்பே யூகித்து கற்பனையாக திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டிருப்பதும், பின்னணியில் ஒலிக்கும் மோகன்லாலின் குரலும் படத்திற்கு கூடுதல் பிளஸ்! 

தகவல்கள் : ஐஸ்வர்யா கோவிந்தராஜன்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close