[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

“கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் விளையாட்டு” ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்

conjoined-thai-twin-sisters-pin-and-pan-say-they-don-t-want-to-be-separated

கே.வி.ஆனந்த் இயக்கிய மாற்றான் திரைப்படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக சூர்யா நடித்து இருந்தார். அந்த படத்தில் இடுப்போடு ஒட்டிப் பிறந்த இரண்டு சகோதரர்களின் வாழ்கையை இயக்குநர் காண்பித்து இருப்பார். அந்த வகையில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இடுப்பு ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் சேர்ந்திருக்கிறார்.

இந்த இரட்டை சகோதரிகள் தற்போது பாங்காக்கில் இருந்து சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகோன் சவான் மாகாணத்தில் உள்ள வளர்ப்பு தாத்தா பாட்டி உடன் வசிக்கிறார்கள். இரண்டு சகோதரிகளின் உடல்கள் ஒட்டி இருந்தாலும், அவர்கள் பண்புகளும், முக அமைப்பும் வித்தியாசமாகத் தான் இருக்கிறது. அவர்கள் பெயர், பான், பின். இந்த சகோதரிகளின் தாய் தந்தையர் உடன் இல்லாத நிலையில், வளர்ப்பு தாத்தா பாட்டியும் இருக்கிறார்கள்.

    

இரட்டை சகோதரிகள் குறித்து வளர்ப்பு பாட்டி நோக்னோய் கூறுகையில், “பான் குறைவான முடி வைத்திருக்க, பின் எப்பொழுதும் நீண்ட முடி வளர்த்திருப்பார். நான் அவர்களுடைய பெற்றோர்களைப் பற்றி பெரிதாக பேசுவதில்லை. அவர்களுடைய தாயை நான் பார்த்ததே இல்லை. அவர்களுடைய தந்தை அவ்வவ்போது வந்து பார்த்து செல்வார். அவர்கள் மிகவும் இயல்பான குழந்தைகள். ஆனால், மற்ற குழந்தைகளை காட்டிலும் வளர, வளர அவர்களுக்கு சிக்கல்கள் கூடுதலாக இருக்கும்” என்கிறார்.

எல்லோரையும் போல் சாதாரண பள்ளியிலே படிக்கிறார்கள்

இரட்டை சகோதரிகளான பான், பின் மற்ற குழந்தைகளைப் போல் சாதாரணமான பள்ளியிலே படிக்கிறார்கள். உடல் அமைப்பு அவர்களுக்கு வித்தியாசமானதாக இருந்தாலும், வகுப்பறையில் இருவரும் மிகவும் பிரபலமானவர்கள். சக பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களை அதிகமாக நேசித்தார்கள்.

  

சகோதரிகள் படிக்கும் பள்ளியின் இயக்குநர் சாயனீ வோங்சுவான் கூறுகையில், “பின், பான் இருவருக்கு உடல் ரீதியாக சிக்கல்கள் இருந்தாலும் அவர்கள் மற்ற பிள்ளைகளைப் போல் சாதாரணப் பள்ளியில் தான் படிக்க வேண்டும். அவருக்கு சிறப்பன கல்வி தேவையில்லை. இந்தச் சகோதரிகள் படிக்க வடிவமைக்கப்பட்ட மேஜை பள்ளியில் உள்ளது. அவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வாக்கர் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார். 

     

ஒவ்வொரு நாள் காலையிலும் பாட்டி நோக்னோய் இரட்டை சகோதரிகளை தன்னுடைய இருசக்கர வாகனத்தின் பின் புறம் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு வருவார். பின்னர், மதியத்திற்கு மேல் அவர்களை அழைத்துச் செல்வார். வீட்டிற்கு சென்றதும் பின், பான் தங்களுடைய வீட்டுப் பாடங்களை செய்வார்கள். பின்னர், தங்களுடைய ட்ரை சைக்கிளில் சென்று அருகில் உள்ள நண்பர்களுடன் விளையாடுவார்கள். 

“நாங்கள் ஒன்றாகவே இருக்க வேண்டும்” பின்-பான்

      

இதுபோல், உடல் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் என்பது அரிதிலும் அரிது. ‘அறுவை சிகிச்சை செய்தால் இரண்டு குழந்தைகளையும் பிரித்துவிடலாம். ஆனல், அதில் பெரிய ரிஸ்க் இருக்கு’ என மருத்துவர்கள் ஆலோசனை கூறியிருக்கிறார்கள். ஆனால், பின் மற்றும் பான் இருவரும் இணைந்து வாழவே விரும்புவதாக தெரிவித்துவிட்டார்கள். அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்கள்.

courtesy - wion news

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close