[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

அன்று சாலையோரத்தில் கிடந்தவர் இன்று ஊருக்கே ஆசிரியர்

this-man-cycles-40-miles-every-day-to-teach-lucknow-s-slum-children

ஆசிரியர் ஒருவர் சைக்கிள் மூலம் சென்று ஏழை பிள்ளைகளுக்கு இலவசமாக பாடம் நடத்தி வருகிறார்.

ஆதித்ய குமார். இவர் லக்னோவில் வசித்து வருகிறார். இந்த வட்டாரத்தில் வாழும் ஏழைப் பிள்ளைகளுக்கு இவர் கடந்த 23 வருடங்களாக சைக்கிளில் சென்று இலவசமாக பாடம் நடத்தி வருகிறார். அதுவும் கந்தலான ஒரு பழைய சைக்கிளை வைத்து கொண்டு இந்தச் சேவையை செய்து வருகிறார் குமார். ஒரு ஜோல்னா பை, சைக்கிள் முன்பாக ஒரு தட்டி பின்புறமாக ஒரு தட்டி என்று சுற்றும் இவரை மொபைலில் தொடர்பு கொண்டால் போதும் உடனே அங்கு வந்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார். அந்தளவுக்கு சுற்று வட்டாரம் முழுக்க குமார் மிகப் பிரபலம். இவரது சாதனையை லிம்கா புத்தகம் அங்கீகரித்துள்ளது. அதற்காக அவருக்கு சான்றையும் அளித்துள்ளது. 

இவருக்கு என்று ஒரு பள்ளிக்கூடம் இல்லை. வகுப்பறை இல்லை. ஆனால் அவரிடம் பாடம் படிக்கும் பிள்ளைகளுக்கோ பஞ்சமே இல்லை. அந்தளவுக்கு தனது ஆசிரிய வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார் குமார். இவரது சேவையை கேள்விபட்ட உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். அதேபோல அம்மாநில ஆளுநர் ராம் நாய்க் கூட இவரது சேவையை புகழ்ந்துள்ளார். 

46 வயது நிரம்பிய குமார், எந்தவிதமான வழக்கமான கல்விமுறையை கடைபிடித்து வகுப்பை நடத்துவதில்லை. நேரடியாக அவரது செயல்முறை மூலம் ஆங்கிலம் மற்றும் கணித வகுப்புக்களை நடத்தி வருகிறார். மிகவும் சாதாரணமான கிராம பின்னணியில் இருந்து வந்தவர் இவர். சலேம்புர் கிராமம் அம்மாநிலத்திலுள்ள மிகச் சிறிய கிராமமாகும். இது உத்திரப்பிரதேசத்திலுள்ள பார்ருக்ஹபாத் நகரத்திற்கு அருகில் உள்ளது. கூலித்தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த குமாருக்கு ஏழைகள் கல்வி கற்பதில் எவ்வளவு சிரமம் என்பது நன்றாகவே தெரியும். 

Read Also -> நாளை முதல் கார், பைக் விலை உயர்கிறது - எதனால் தெரியுமா?

சிறு வயதிலேயே இவரது பெற்றோர்கள் இவரை பள்ளிக்கு அனுப்பிய நேரம் போக கூலித்தொழிலின்போது கூடவே ஒத்தாசைக்கு வைத்து கொண்டனர். அவருக்கு சிறுவதில் வேலை செய்வது பிடிக்கவில்லை. படிக்க வேண்டும் என்பது கனவு. ஆகவே அவர் வீட்டைவிட்டு ஓடிவிட்டார். வீதியிலேயே வாழ ஆரம்பித்தார். அப்போது ஒரு ஆசிரியர் இவருக்கு உதவினார். அவரது உதவியால்தான் கல்லூரி வாசல் வரை போனது குமாரின் வாழ்க்கை. அந்த வறுமை கொடுத்த தர்ம அடி அவரை சேவை செய்ய அழைத்தது. தன்னைபோல தரையில் கிடக்கும் தலைமுறைக்கு வாழ்க்கை கொடுக்க அழைத்தது. அதனை அன்பாக ஏற்றார் குமார். இன்று தினமும் 200 பிள்ளைகளுக்கு பாடம் நடத்துகிறார். ஒரு நாளைக்கு 200 பேர்கள் என்றால் சும்மாவா? அதுவும் சைக்கிளில் பயணித்து செய்வது மலைப்பான காரியம்.

இது குறித்து டெலிகிராஃப் இணையதளத்திற்கு அவர் பேசியிருக்கிறார்.  “நான் எங்கு வேண்டுமானாலும் போவேன். அங்குள்ள படிப்பறிவு இல்லாத மக்களிடம் ‘படிக்காமல் இருப்பது சாபம். படிப்பால் மட்டுமே உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்’ என்று நான் சொல்வேன். அதைகேட்டு பெற்றோர்கள் அவரது குழந்தைகளை தினமும் பள்ளிக்கு அனுப்புவார்கள். நான் வறுமையை பக்கத்தில் சென்று பார்த்திருக்கிறேன். ஏனென்றால் என் அப்பா ஒரு கூலித் தொழிலாளி” என்கிறார் இந்த அற்புத ஆசிரியர் ஆதித்ய குமார்.  

Read Also -> ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு!  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close