[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

பிக்பாஸ் ஐஸ்வர்யா 'சைகோவா' இல்ல சர்வாதிகாரியா ? சமூக வலைத்தளங்களில் வலுக்கும் எதிர்ப்பு !

bigg-boss-2-tamil-episode-45-aishwarya-dumps-trash-on-balaji-s-head

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மொத்தம் 16 பேர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர். கடந்த சில நாட்களாக நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்குள் வாக்குவாதம் அதிகரித்து வருவதால் நிகழ்ச்சி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே கமல் போட்டியாளர்களுடன் உரையாடுவார். 

பிக்பாஸ் வீட்டில் வாரம் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார். அதன்படி இந்தவாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவராக ஐஸ்வர்யா தத்தா நியமிக்கப்பட்டார். ஐஸ்வர்யா தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து பாலாஜிக்கும் அவருக்குமான உறவு பிக்பாஸ் வீட்டில் சரியில்லை. திங்கள்கிழமை வெளியான நிகழ்ச்சியில் கூட இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இந்தப் பிரச்சனை செவ்வாய்க்கிழமை உச்சத்தை தொட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு "டாஸ்க்" கொடுக்கப்படும். அதன்படி நேற்று பிக்பாஸ் வீட்டின் சர்வாதிகார ராணியாக ஐஸ்வர்யா தத்தா நியமிக்கப்பட்டார். அவரின் பாதுகாவலராக டேனியலும், ஆலோசகராக ஜனனியும் நியமிக்கப்பட்டார்கள். அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த டாஸ்க் தொடரும் என்றும் பிக்பாஸ் அறிவித்தார். இதனையடுத்து ஐஸ்வர்யா சர்வாதிகாரியாக தனது முகத்தை காட்டத் தொடங்கினார். பிக்பாஸ் வீட்டுக்கென பலவிதமான கடுமையான விதி மீறல்களை வகுத்தார்.

ஐஸ்வர்யா சர்வாதிகார ராணி என்பதால் அவரின் முகத்தை பார்த்து மற்ற குடும்ப உறுப்பினர்கள் யாரும் பேசக் கூடாது. தலை குனிந்துதான் பேச வேண்டும், எல்லோரும் குழுவாக உட்கார்ந்து பேசக் கூடாது, எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது போல கடுமையான விதிமுறைகளை வகுத்தார் ஐஸ்வர்யா தத்தா. இந்த டாஸ்க்கை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு, சர்வாதிகாரிக்கான அறையில் பிக்பாஸ் வீடியோவின் போட்டுக்காட்டினார். அதனை ஐஸ்வர்யாவும், டேனியலும், ஜனனியும் பார்த்தனர். அந்த வீடியோதான் ஐஸ்வர்யா உக்கிரமானதுக்கு காரணமாக அமைந்தது.

அந்த வீடியோவில் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் உட்கார்ந்து ஐஸ்வர்யாவை கிண்டல் செய்து ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர். சிலர், ஐஸ்வர்யாவை பற்ற புறம் பேசிக் கொண்டிருந்தனர், அப்போது பாலாஜி உள்ளிட்ட அனைவரும் சிரித்துக்கொண்டு இருந்தனர். இதனைப் பார்த்து கோபமடைந்த ஐஸ்வர்யா, பழிக்பழி தீர்க்க முடிவு செய்தார். "எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு நான் பிக் பாஸ் வீட்ல இருந்து வெளியே போனாலும் பரவாயில்லை, பாலாஜியை பார்த்து நாய் பன்னி" என திட்டித் தீர்த்தார். இதனையடுத்து அறையில் இருந்து வெளியே வந்த ஐஸ்வர்யா போட்டியாளர் ஷாரிக்கை அழைத்து குப்பை கூடையில் இருந்த குப்பையை பாலாஜி மீது கொட்ட சொன்னார்.

இதனை செய்ய ஷாரிக் தயங்கவே மற்ற போட்டியாளர்களை அழைத்தார். ஆனால் யாரும் அதைச் செய்ய முன்வரவில்லை. அப்போது தான் குப்பையை பாலாஜி மீது கொட்டினார், அப்போது அவர் அமைதியாகவே உட்கார்ந்திருந்தார். உடனிருந்த மும்தாஜ் பதறி அடித்துக்கொண்டு பாலாஜி மீதிருந்த குப்பை அகற்றினார். ஆனால் பாலாஜி அமைதியாகவே இருந்தார், யாரும் குப்பையை சுத்தம் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். பாலாஜி மீது குப்பை கொட்ட மறுத்த ஷாரிக்கின் உடை மற்றும் பொருள்களை நீச்சல் குளத்தில் வீசச் சொன்னார். பின்பு, ரித்விகாவின் உடை மருந்துகளையும் நீச்சல் குளத்தில் போடச் சொன்னார். ரித்விகாவை நீச்சல் குளத்தில் இறங்கி உடமைகளை மூழ்க வைக்குமாறு கட்டளையிட்டார்.

 

இதன் பின்பு மீண்டும் பாலாஜியை சீண்டினார் ஐஸ்வர்யா. அப்போது பாலாஜி, ஒன்றும் தெரியாதது போல பக்கவாட்டில் துப்பினார். அதனை பார்த்து கோபமான ஐஸ்வர்யாவும் துப்பினார். பின்பு, செண்ராயனை கூப்பிட்டு ஐந்து கெட்டு வார்த்தைகளில் பாலாஜியை திட்டுமாறு கட்டளையிட்டார், அவரும் திட்டிவி்ட்டு சென்றார். பின்பு "நீங்களாம் என்னென்ன பேசுறீங்கனு எனக்கு தெரியும், உங்கள நான் வெச்சு செய்யப்போறேன்" என கூச்சலிட்டார். இப்படியான களேபேரங்களுடன் நேற்றைய நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதனையடுத்து இன்றைய நிகழ்ச்சியின் சில காட்சி ஒளிபரப்பப்பட்டன. அதில் செண்ராயனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் ஏதோ பிரச்சனை ஏற்படுகிறது. இதில் செண்ராயனை நாயே என திட்டிவிடுகிறார் ஐஸ்வர்யா, பதிலுக்கு அவரை தாக்க செண்ராயன் பாய்ந்து செல்கிறார் அவர்.

பிக் பாஸின் நேற்றைய நிகழ்ச்சிக்கு கடுமையான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வரத் தொடங்கி இருக்கின்றன. இதில் பெரும்பாலும் ஐஸ்வர்யாவுக்கு எதிராகவே வந்துள்ளது "பிக்பாஸின் இந்த டாஸ்க் அறுவறுப்பாக உள்ளது. வயதில் மூத்தவரான பாலாஜி மீது குப்பை கொட்டியது கேவலமான செயல்" என பலரும் திட்டித் தீர்த்து வருகின்றனர். பல பிரபலங்களும் பிக் பாஸின் நேற்றைய நிகழ்ச்சியை கடுமையாக தாக்கி பதிவிட்டு வருகின்றனர். பலர் ஐஸ்வர்யாவை சைக்கோ என்று கூட வசைபாடி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close