[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு

கோடிகளை கொட்டிக் கொடுக்கும் விஜய்யின் தீபாவளி சென்டிமென்ட்

sarkar-vijay-has-selected-diwali-as-his-signature-festival-after-success-of-thuppakki-kaththi-mersal

தீபாவளியை மையமாக வைத்து வெளியாகும் திரைப்படங்கள் அதிக வசூலை ஈட்டித் தருவதாகவும் ஆகவே அதிகம் விஜய் விரும்பும் பண்டிகையாக தீபாவளி மாறி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

பாலிவுட் உலகத்தில் ஷாரூக் கானுக்கு தீபாவளிதான் விருப்பமான பண்டிகை. அந்த செண்டிமெண்ட்டில் அவரது படங்கள் வெளியானால் அவை ப்ளாக்பாஸ்டர் ஹிட் என்பதை எழுதி வைத்துக் கொள்ளலாம். அவரது நடிப்பில் வெளியான ‘ஓம் சாந்தி ஓம்’, ‘ஆப் டாக் ஹை ஜான்’, ‘ரா. ஒன்’ படங்கள் முழுக்க தீபாவளி பண்டிகை நாளில் வெளியானவைதான். அதே அளவுக்கு வெற்றியையும் அவை ஈட்டிக் கொடுத்தன.

அதே போல் சல்மான் கான் தனது படங்களை ஈத் பண்டிக்கையின் போது வெளியிடுவதை அதிகம் விரும்பக் கூடியவர். அந்த நாளில் வெளியான பல படங்கள் ப்ளாக்பாஸ்டர் ஹிட்டை ஈட்டிக் கொடுத்துள்ளன. அவரின் ‘பாஜ்ரங்கி பைஜான்’ ‘சுல்தான்’ போன்ற படங்கள் ரம்ஜானை குறி வைத்து வெளியிடப்பட்டவை. அவரை அடுத்து ஆமீர் கான். இவர் விரும்பும் பண்டிகை கிறிஸ்துமஸ். அவரது ‘பி.கே.’,‘தங்கல்’ போன்ற படங்கள் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகி மாபெரும் வெற்றியை அடைந்தன.  

இந்தி நடிகர்களை போலவே விஜய்க்கும் சில செண்டிமெண்ட் இருக்கிறது. அவர் தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு பண்டிகைகளை கணக்கு வைத்து வெளியிட்ட படங்கள் பெரிய வெற்றிப்படங்களாக மாறியுள்ளன. அப்படி இந்தப் பண்டிகைகளை கணக்கில் வைக்காமல் வெளியான பல படங்கள் அதிக அளவில் வசூலை வாரிக் குவித்ததில்லை. பொங்களை மையமாக வைத்து வெளியானதால்தான் ‘ஜில்லா’வும் ‘பைரவா’வும் வசூல் அளவில் தப்பிப் பிழைத்தது. 

விஜய் தனது நெருங்கிய வட்டாரத்தில் இனிமேல் தீபாவளியை மையமாக வைத்தே தனது படங்களை வெளியிடத் தீர்மானித்திருப்பதாக கூறி உள்ளதாக தெரிகிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அந்தப் பண்டிகையில் வெளியாகும் அவரது படங்களுக்கு அமோக வசூல் உறுதி செய்யப்பட்டுள்ளன.

2012 தீபாவளியை குறி வைத்து வெளியான ‘துப்பாக்கி’ 100 கோடியை வசூல் செய்தது. விஜய் சினிமா வாழ்க்கையில் முதன்முறையாக 100 கோடியை தொட்ட திரைப்படம் இதுதான். அதே போல் 2014 தீபாவளியை குறி வைத்து வெளியான ‘கத்தி’ 100 கோடியை தொட்டது.அதே போல் கடந்த வருட தீபாவளி பண்டிகையன்று வெளியான ‘மெர்சல்’ 200 கோடியை வாரி வசூலித்து சாதனை படைத்தது. அதே போல ‘பிரியமானவளே’, ‘திருமலை’, ‘சிவகாசி’ , ‘வேலாயுதம்’ எல்லாம் விஜய்யின் தீபாவளி வெற்றிப் படங்கள்தான். 

ஆகவேதான் இந்த வருட தீபாவளியை கணக்கு வைத்து ‘சர்கார்’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் விஜய். நிச்சயம் இது 200 கோடி சாதனையை முறியடிக்கும் என கூறுகிறார்கள் விஜய் ரசிகர்கள். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close