[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

வகை வகையான வாழ்த்து அட்டை

lot-of-greetings-card-memories-will-continue

இப்போது எல்லாம் முகத்துக்கு நேரா வாழ்த்து சொல்றவங்கள விட முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் தான் வாழ்த்து சொல்றவங்கள அதிகமா பாக்குறோம். happy Pongal ,happy birthday என ஒற்றை வரியில் அத்தனைபேருக்கும் எளிதாக வாழ்த்து சொல்லிவிட முடிகிறது. தெரிந்தவர் தெரியாதவர் என்ற பேதமெல்லாம் இல்லை.

இதுவும் நல்ல விஷயம்தான். ஆனால் உறவுகளுக்கு கூட அதே வாட்ஸ் அப் வாழ்த்து தான். எதுக்கு ஒவ்வொருத்தருக்கா ஃபோன்ல பேசிகிட்டு… ஒரு group கிரியேட் பண்ணி வாழ்த்து சொல்லிவிட்டால் போகுது என்கிற ஒரு சோம்பேறித்தனம் தான் நமக்கு. ஆனால் ஆறுதல் கொள்ள வேண்டிய விஷயம் இதை கூட சிலர் செய்ய முன்வருவதில்லை என்பதுதான்.

இதையும் படிக்கலாமே...பழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...

இதையெல்லாம் பார்க்கும் போது அப்போதெல்லாம் ஒரு வாழ்த்து சொல்ல எவ்வளவு சிரத்தை எடுத்திருக்கிறார்கள் என்பதை நினைக்க தோன்றுகிறது. வாழ்த்து அட்டைகள் பற்றி கேள்வி படாதவர்களே இருக்க முடியாது. வகைவகையான வாழ்த்து அட்டைகள்… ஏராளமாய் குவிந்து கிடக்கும் கடைகளில். வாழ்த்து அட்டைகளுக்காக மட்டுமே கடைகள் நிறைய இருந்தன.

நடிகர், நடிகைகள் மற்றும் தலைவர்களின் படங்கள் இயற்கை காட்சிகள் என எண்ணற்ற படங்களுடன் வாழ்த்து அட்டைகளை பார்க்க முடியும். வாழ்த்து அட்டையில் உள்ளே உள்ள ஒரே ஒரு பக்கத்தில் இருக்கும் வார்த்தைகளை படித்து பார்த்து பிடித்தவர்களுக்கு தரும் ஆனந்தம் இருக்கிறதே… அது ஒரு தனி சந்தோஷம்தான்.

பண்டிகையோ… பிறந்த நாளோ… நெருங்கி விட்டால் போதும் போஸ்ட்மேன்கள் வாழ்த்து அட்டை கொடுத்தே அசதியாகிவிடுவார்கள். கிராமங்களை காட்டிலும் நகர் புறங்களில் இந்த வழக்கம் அதிகமாக இருந்தது. அதற்கு அத்தகைய கடைகள் அவர்களுக்கு அருகிலேயே இருந்தது கூட காரணமாக இருக்கலாம்.

சிலர் இந்த வாழ்த்து அட்டைகளை தபால் தலைகள் மாதிரி சேர்த்து வைத்திருப்பார்கள். பாருங்கள்! எனக்கு எத்தனை பேர் அன்பு காட்டுகிறார்கள் என்று பெருமை அடித்த கொள்ள அல்லது அவர்களின் நினைவாக…!  அப்போது வந்த திரைப்படங்களில் பெரும்பாலும் கதாநாயகன் தன் காதலை கதாநாயகியிடம் சொல்ல போகிறான் என்றால்… அந்தக் காட்சிகளில் கண்டிப்பாக ஒற்றை ரோஜாவுடன் ஒட்டி இருக்கும் இந்த வாழ்த்து அட்டைகள்.

வாழ்த்து அட்டைகள் இன்னும் இருக்கின்றன. கடைகளிலும் ஆன்லைன் ஷாப்பிங்கிலும் நாம் பார்க்கலாம். ஆனால் அதனை எத்தனை பேர் விரும்பி வாங்குகிறார்கள் என்பது கேள்வியே…! வாழ்த்து அட்டை என்பது வெறும் காகிதம் அல்ல. அது அன்பின் வெளிப்பாடு. தன் நண்பனுக்காவவோ உறவுக்காகவோ ஒருத்தன் அலைந்து திரிந்து தேடி எடுத்து வாழ்த்து அட்டையை அனுப்புகிறான் என்றால்….அதில் எத்தனை அக்கறையும் அன்பும் இருக்க வேண்டும் !!!

இந்த அன்பு பொத்தம் பொதுவாக முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் நாம் சொல்லும் வாழ்த்துகளில் இருக்குமா என்பது சந்தேகமே !!!

(ஞாபகம் வருதே தொடரும்)

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close