[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

பழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...

old-memories-will-continue

“காலையில் என்ன சாப்பிட்ட” என்ற கேள்வியை பொதுவாக ஒருவரிடம் கேட்டால் பதில் ஒன்றுதான் வரும். இட்லி. அப்படி இல்லைனா தோசை. சுடும் முறை மாறலாம். ஆனால் மூலப் பொருள் ஒன்றுதான். இதை தாண்டி வேறு பதில்கள் வருவது மிக சொற்பம்.

அதனாலயோ என்னவோ அம்மாக்கள் இட்லி மாவு இல்லையென்றால் அய்யோ என்பார்கள்….வீட்டில் இருக்கும் குழந்தைகளை கேட்டால் ஒண்ணு பூரி வேண்டாம்னு சொல்லும். இன்னொனு பொங்கல்  வேண்டாம்னு கத்தும்…இவர்களுக்கு மத்தியில் நுழையும் தாத்தாவோ பாட்டியோ உப்புமா மட்டும் செஞ்சிடாதேனு  கெஞ்சுவார்கள்.

இப்படி ஆளுக்கு ஒரு கோணத்தில் இருக்கும் போது அம்மாவின் நிலைதான் பரிதாபம். கட்ட கடைசியாக வரும் அப்பாக்கள் அந்தப் பழைய சோத்தை கொண்டு வா என்பார். இதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் இயல்பாய் நடப்பதுதான். அப்பா பழைய சோறு கேட்கிறாரே என்று பரிதாபமாக இருக்கலாம்…
ஆனால் ஒரு காலத்தில் பழைய சோறுதான் பெரும்பாலும் காலை உணவாக இருந்தது. அதுவும் கிராமங்களில் கேட்கவும் வேண்டாம்.

காலையில் எழுந்தால் டீ, காபி குடிக்கிறார்களோ இல்லியோ? ஒரு செம்பு நீராகாரம் குடித்து விடுவார்கள். முதல் நாள் மீந்தும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி அடுத்த நாள் காலையில் எடுத்து அந்தப் பழைய சாதத்தை எடுத்து சாப்பிட்டால் அடடா இதுவெல்லவோ அமிர்தம் என்று தோன்றும்.
பழைய சோற்றை ஒருபிடி… பச்சை மிளகாயை ஒரு கடி…. என ரசித்து ருசித்து சாப்பிடுபவர்கள் ஏராளம். இதில் சிலர் ஊறுகாய், உப்பு மாங்காய், வெங்காயம், வறுத்த மிளகாய் என விதவிதமான தொட்டு கைகளுடன் சாதத்தை ஒரு கட்டு கட்டுவார்கள். அதிலும் ஊர வச்ச சோற்றோடு உப்பு கருவாடு கொஞ்சம் இருந்தால் போதும் ஊட்டி விட ஒருத்தரும் தேவையில்லை.

வயல்களுக்கும் காடுகளுக்கும் வேலைக்கு செல்லும் ஆண்களும் பெண்களும் காலைக்கு மதியத்துக்கு என்று தனித் தனியாக டிபன் பாக்ஸ், லஞ்ச் பாக்ஸ் என்றெல்லாம் எடுத்து கொண்டு போக மாட்டார்கள். ஒரு தூக்குச் சட்டி நிறைய பழைய சாதம், அது போதும் அன்றை நாள் ஓடிவிடும். பழைய சோறு உடலக்கு நல்லது என்பதை தாண்டி ஏழைகளுக்கு எளிதாக கிடைக்க கூடிய ஒரு ஆரோக்கியமான உணவு அதுதான்.

ஆள் வைத்து வேலை செய்யும் அளவுக்கு வசதி இருக்காது …அதே சமயம் வீட்டில் உள்ள அத்தனை பேரும் பொருளாதாரத்தை தேடி ஓட வேண்டும் என்ற நிலையில்… விதவிதமாகவோ வித்தியாசமாகவோ சமைப்பதற்கெல்லாம் நேரமில்லை என்ற நிலையில் பழைய சோறு தான் அவர்களுக்கு பலம் தரும், பயன் தரும் உணவு.

பழைய சோற்றின் வாசமே பலருக்கு பசியைத் தூண்டும். நாலு கைப்பிடி சோற்றை சாப்பிட்டுவிட்டு அதில் உள்ள நீராகாரத்தை மூச்சு முட்ட குடித்த பிறகு இருக்கும் ஒரு நிறைவு இருக்கிறதே அதுக்கு வார்த்தையே கிடையாது. திண்ணத் திண்ண திகட்டாது என்பார்கள். அது எந்த உணவுக்கு பொருந்துதோ இல்லையோ பழைய சோறுக்கு அப்படியே பொருந்தும். சிலர் பழைய சாதத்தில் தண்ணீர் பிழிந்து எடுத்து விட்டு தயிர் ஊற்றி மதிய உணவுக்கு எடுத்து செல்வார்கள். கடுகு, கரு வேப்பிலை என எந்த அலங்காரமும் இல்லாத அந்தத் தயிர் சாதத்தின் ருசிக்கு ஈடு இணையில்லை.

பலரும் கிராமபுற வாழ்க்கை பற்றி பேசும் போது பழைய சாதத்தை பற்றி பேசுவார்கள்… ஆனால் அந்தப் பழைய சோற்றின் ருசியே இப்போது மாறிவிட்டது. பழைய சாதம் என்ற பெயரில் ருசியில்லாமல் வாசமில்லாமல் அம்மா தரும் தண்ணீர் சாதத்தைதான் அதிகபட்சம் சாப்பிடலாம். கைகுத்தல் அரிசி எப்போது கடை அரிசியாக மாறியதோ …! குண்டானில் சாதம் வடித்த காலம் மாறி குக்கர் சாதம் எப்போது வந்ததோ …அப்போதே மாறிவிட்டது பழைய சோற்றின் சுவையும் மணமும்…!!!

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close