[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் தூக்கு தண்டனை: போக்சோ சட்டம் ஒரு பார்வை

a-look-at-the-pocso-act-law-and-what-is-telling-pocso-act

குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டமே போக்சோ சட்டம் ஆகும். குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும், குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களை மீட்க 2012ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்படுபவருக்கு எதிராக பதிவு செய்யப்படும் வழக்கை 3மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடித்து குற்றம்செய்தவர்க்கு தண்டனை வழங்க வேண்டும்.

மற்ற வழக்குகளைபோல குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை வெளிப்படையாக விசாரிக்கத் தேவையில்லை, பாதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்கால நலன் கருதி  வழக்கு விசாரணை ரகசியமாக நடத்தப்படும்.

இந்தக் குற்றம் சம்பந்தமாக, எப்.ஐ.ஆர். பதிவு செய்த பின் தான், விசாரிக்க வேண்டும் என்பதில்லை. புகார் வந்தவுடனேயே காவல்துறையினர் துரிதமாக விசாரணையைத் தொடங்க வேண்டும்

மேலும், பாதிக்கப்பட்ட குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக, யாராக இருந்தாலும், அவர்களின் வீட்டிற்கே சென்று காவல்துறையினர் விசாரணை செய்ய வேண்டும்.

குற்றம் சுமத்தப்பட்டவரை உடன் வைத்துக்கொண்டு, பாதிப்புக்குள்ளான குழந்தைகளிடம் கண்டிப்பாக விசாரிக்க கூடாது. காவல்நிலைய எல்லை பிரச்னையை காரணம் காட்டி, வழக்கு விசாரணையை அதிகாரிகள் தட்டிக்கழிக்கவும் கூடாது.

இந்த விதிகளை காவல்துறை அதிகாரிகள் மீறினால் அவர்கள் மீதும், வழக்குப்பதிவு செய்வதற்கு, போக்சோ சட்டம் வழிவகை செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக  உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட வேண்டும்.

நீதிபதியின் முன்னிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையிடம், ரகசிய வாக்குமூலம் பெறப்பட வேண்டும், வாக்குமூலமும் உடல் பரிசோதனை அறிக்கையுமே வழக்கிற்கு தேவையான முக்கிய ஆதாரங்கள் ஆகும்.

2012 முதல் போக்சோ சட்ட‍ம் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் இருந்தபோதும், சமீபகாலமாக குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்த‍ல்கள், சீண்டல்கள் அதிகரித்துக்கொண்ட சென்றதால் கடந்த ஏப்ரலில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதன் மூலம் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுப்பவருக்கு போக்சோவின் கீழ் உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதிக்கவும் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close