[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

இதுக்கு ஒரு 'எண்டே' கிடையாதா ? தொடரும் நெய்மர் மீம்ஸ் !

seems-to-be-there-is-no-end-for-trolling-neymar-meme-continue-to-be-viral-in-social-media

"நான் சும்மா இருந்தாலும் சுத்தி இருக்கிறவன் வாய் சும்மா இருக்குதா" இதுதான் பிரேசிலின் உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் நெய்மர் ஜூனியரின் மைன்ட் வாய்ஸாக இருக்கும். ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஆம், காலிறுதிப் போட்டிகள் நாளை முதல் தொடங்குகிறது.

இதில் பல முறை சாம்பியன்களான பிரேசில் அணி, டெரர் காட்டும் பெல்ஜியம் அணியுடன் மோதுகிறது. ஒரு பக்கம் பிரேசில் ரசிகர்கள் தங்கள் அணியின் சிறந்த வீரர் நெய்மர் கலக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் மற்றொரு பக்கம் நெய்மரை இன்னும் கலாய்த்துக்கொண்டு இருக்கின்றனர் மற்ற நாட்டு ரசிகர்கள். பிரேசில் நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் மெக்சிகோவுடன் மோதியது.

அதில் நெய்மருக்கு அடிபட்டு அதற்கு களத்தில் அவர் காட்டிய ரியாக்சன்தான் உலகம் பூராவும் வைரல். பல கால்பந்தாட்ட ரசிகர்கள் நெய்மர் துடிதுடிப்பதை பார்த்து, ஐயோ பாவம் என உச்சுக்கொட்ட, மற்றவர்கள் "டேய் ரொம்ப நடிக்காதடா" என மீம் போட்டு தாக்கி வருகின்றனர்.இதில் உச்சகட்டமாக மெக்சிகோ பயிற்சியாளர் ஒசாரியா "நெயமர் களத்தில் நடிப்பதை விட்டுவிட்டு விளையாட்டில் கூடுதல் கவனம் செலுத்தினால், பிஃபா விருதுகளை வாங்கலாம்" என தன் பங்குக்கு எரிகிற தீயில் நெய்யை ஊற்றியுள்ளார் .

இந்த அபலையை காப்பாற்ற யாரும் இல்லையா என்று நெய்மர் கதற, நான் இருக்கேன்டா செல்லம் என ஆதரவாக ஆஜர் ஆகியிருக்கிறார் பிரேசில் அணியின் ஈடு இணையற்ற முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டோ."நெய்மர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் மீது எனக்கு உடன்பாடில்லை. நெய்மர் மிகவும் திறமைவாய்ந்த வீரர். ஆடுகளத்தில் இருக்கும் நடுவர்கள் நெய்மருக்கு போதிய பாதுகாப்பை அளிக்கவில்லை.

நெய்மரை குறி வைத்து எதிர் அணி வீரர்கள் அவரை தாக்குகின்றனர். மீடியா காரங்களுக்கு வேற வேலையில்லை" என காட்டமாக கூறியுள்ளார். நெய்மருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பிரஞ்ச், இதாலி மொழிகளில் கூட மீம்கள் உலா வருகின்றன.

நெய்மர் நாளை நடைபெறும் போட்டியில் சிறப்பாக விளையாடி கோல் அடித்து தன் அணியை வெற்றிப் பெற வைத்தால் மட்டுமே இதுக்கு ஒரு முடிவு வரும், இல்லையென்றால் மீம்ஸ்கள் தொடரும்.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close