[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

‘பாராட்டும் திட்டும் என்னை ஒன்றும் செய்யாது’ - கெத்துக் காட்டிய நெய்மர்

neymar-said-i-do-not-much-care-for-criticism-not-even-for-praise-because-this-can-influence-in-a-way-the-athlete-attitude

உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றிலும் மெக்சிகோ அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் நெய்மர் அடித்த ஒரு கோல் வெற்றிக்கு முக்கியமானதாக அமைந்தது. மற்றொரு கோல் அடிக்கவும் அவர் உதவினார். பிரேசில் அணி வெற்றி பெற்ற போதும் அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. மெக்சிகோ அணியுடனான போட்டியின் போது அந்த அணியின் மாற்று வீரர் மிக்கல் லாயுன், நெய்மர் இடையே பந்தை விரட்டி சென்ற போது மோதல் ஏற்பட்டது.  இதில் கீழே நெய்மர் விழுந்தார். விழுந்து உருண்டு ஓடினார். வலியில் துடித்தார். அப்பொழுது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் சுமார் 4 நிமிடங்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

                            

நெய்மர் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார் என்று மெக்சிகோவின் பயிற்சியாளர் ஒசாரியோ இந்த கடும் விமர்சனத்துள்ளார். போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஒசாரியோ, நெய்மர் பெயரை குறிப்பிடாமல் இந்த விமர்சனத்தை முன் வைத்தார்.

மெக்சிகோ பயிற்சியாளர் ஒசாரியோ பேசுகையில், “இது கால்பந்தாட்டத்திற்கு வெட்கட்கேடானது. ஒரே ஒரு விளையாட்டு வீரரால் நாம் நிறைய நேரத்தை இழந்துவிட்டோம். இதுபோன்ற செயலை நாம் அடிக்கடி தடுத்து நிறுத்தினோம். கால்பந்தாட்ட உலகிற்கு இதுமிகவும் மோசமான எடுத்துக் காட்டாகும். கால்பந்தாட்டத்தை பின்பற்றும் எல்லா குழந்தைகளுக்கும் கூட. இதுஒரு வலிமையான விளையாடு. ஒரு மனிதனின் விளையாட்டு. இதுபோன்ற நடவடிக்கைகள் இருக்கக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்” என்று சாடினார். 

கடந்த இரண்டு போட்டிகளில் செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்து வந்த நெய்மர், இந்த முறை செய்தியாளர்களிடம் விரிவாக பேசினார். அப்போது, நேரத்தை வீணடிக்கிறார் என்ற விமர்சனம் குறித்து நெய்மரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு லேசாக சிரித்துக் கொண்டே பதில் அளித்த நெய்மர், “பயிற்சியாளர்களை நாங்கள் மதிக்கிறோம். மெக்ஸிகோவின் பயிற்சியாளர் சில குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கிறேன். திறமை வாய்ந்த மெக்ஸிகோ வீரர் ஓசோவாவை எங்களுக்கு தெரியும். நான் ஒரு பிரேசிலியன். என்னுடைய விடாமுயற்சி கடைசி வரை இருந்தது. நாம் கஷ்டப்பட கற்றுக் கொள்ள வேண்டும். இது மிகவும் கடினமான மேட்ச். 

                                    

இது என்னையும் என்னுடைய அணியையும் வலுவிழக்கச் செய்யும் முயற்சி. அதனால், விமர்சனங்கள் குறித்து அதிகம் கவலைப் படுவதில்லை. அதேபோல் தான் பாராட்டுக்களையும். விமர்சனங்களும், பாராட்டுக்களும் ஒரு விளையாட்டு வீரரின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த இரண்டு போட்டிகளின் போது நான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. சர்ச்சைகளை தவிர்க்க வேண்டும் என்பதே அதற்கு காரணம். என்னுடைய சக வீரர்களுடன் சேர்ந்தே நான் வெற்றியை எட்டுவதற்கு இங்கு உள்ளேன்.

நெய்மர் உலகக் கோப்பையாக இருக்க நான் விரும்பவில்லை. இது பிரேசிலின் உலகக் கோப்பையாக இருக்க விரும்புகிறேன். தனிப்பட்ட நபர்களின் திறமையை காட்டிலுக் கூட்டு உழைப்பு தான் முக்கியமானது.” என்றார். 

                                   

அதேபோல், பிரேசில் அணியின் பயிற்சியாளர் டைட்டும் இந்த விமர்சனம் குறித்து பதில் அளித்தார். டைட் கூறுகையில், “உலகக் கோப்பைக்கு முன்பு சில மாதங்களாகவே நெய்மர் ஓய்வில் இருந்தார். காலில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை காரணமாக கடந்த 3 மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். ஒரு டாப் லெவல் வீரர் உடல்நிலை தேறி வர 4 அல்லது 5 மாதங்கள் ஆகும். நெய்மர் முந்தைய போட்டியில் நன்றாக விளையாடினார். அதேபோல் தான் இந்தப் போட்டியிலும். போட்டியில் என்ன நடந்தது என்பதை பார்த்தேன். எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ரிப்ளே செய்து பார்த்தால் தெரியும்” என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close