[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

காற்று வாங்கப் போனேன் ! அதை காசு கொடுத்து வாங்கி வந்தேன்

pure-air-container-has-been-introduced-in-chennai-market

இந்தியாவின் முக்கிய நகரங்களில் OXY99 ஆக்சிஜன் கேன்கள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தமிழகத்திலும் வந்துவிட்டது அதே ஆக்சிஜன் கேன். ஆக்சிஜன் இல்லாமல் மூளையால் செயல்பட முடியாது, மனிதன் உணர்வற்ற நிலைக்குத் தள்ளப்படுவான். 20 ஆண்டுகளுக்கு முன் பாட்டிலில் அடைத்து தண்ணீரை விற்கும் பழக்கம் நம் நாட்டில் கிடையாது. ஆனால் இப்போது கேன் வாட்டர் இல்லாத இடமே இல்லை. ஏன் குடிநீரை பாட்டிலில் அடைத்து அரசே விற்பனை செய்கிறது. அதுபோல காற்றையும் பாட்டிலில் அடைத்து விற்கும் பழக்கம் நம்மிடம் வந்துவிட்டது. ஆம் சென்னையில் மக்கள் கூட்டம் அலைமோதும் இடத்தில் “ஆக்சிஜன் கேன்” விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பூங்கா ஒன்றின் முன் ஆக்சிஜன் கேன் விற்பனை செய்யப்படுகின்றன. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆக்சிஜன் கேன்

காற்று மாசு பிரச்சினையில் உலக அளவில் இந்தியா பிரதான இடத்தில் உள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், மனிதர்கள் சுவாசிக்கும் காற்று மாசடைந்து சுவாசிக்க தகுந்த இல்லாத சூழல் உருவாகி விட்டது. சுற்றுச்சூழல் காற்று மாசு காரணமாக இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்றுமாசுபாடு அதிகரித்த நிலையில் “ஆக்சிஜன் கேன்” விற்பனைக்கு வந்தது. காற்றுக்கு விலை கொடுக்க வேண்டிய நிலை வரும் என்று நாம் என்றாவது நினைத்திருப்போமா ?. இதில் ஆச்சர்யம் என்னவேன்றால் டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் ஆக்சிஜன் கேன்கள் ஏற்கெனவே விற்பனைக்கு வந்துவிட்டன. தற்போது தான் நம் தமிழகத்தில் ஆக்சிஜன் கேன்கள் விற்பனை வந்துள்ளது. விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் கேன்கள் ஒன்றின் விலை 650 ரூபாய்.

காற்று மாசுபாடு உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் இதனைப் பயன்படுத்தலாம் என்கின்றனர். தற்போது விற்பனை மெதுவாக இருந்தாலும் வருங்காலங்களில் காற்று விற்பனை அமோகமாக இருக்கும் என்று காற்றை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் கூறுகின்றன. அதேபோல சில ஆன்லைன் விற்பனை தளங்களிலும் இம்மாதிரி “ஆக்சிஜன் கேன்கள்” கிடைக்கின்றன.

நாம் நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் நம் இயற்க்கை வளங்களை இழந்து வருகிறோம். காற்றை காசு கொடுத்து வாங்கும்நிலை தற்போது என்ன அவசியமானதா ? இதற்கு பதில் இல்லை என்றே சொல்லலாம். விலை மதிப்புமிக்க காற்றை இன்று நாம் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறோம். மிகவும் வசதி படைத்தவர்கள் இம்மாதிரியான காற்றைக் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தலாம். மற்றவர்கள் ? சாமானிய மக்களின் வாழ்வாதாரம் என்னவாகும்.

காற்று மாசு காரணமாக பல்வேறு பிரச்சினைகள், நோய்கள் பரவி வருகிறது. இதைத்தடுக்க உலகம் முழுவதும் மரங்களை நடுமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சுத்தமான காற்றுக்காகவும் வணிகத்துக்காகவும் பல நாடுகள் இதுபோன்று காற்றை அடைப்பட்ட கேன்கள் மூலமாக விற்பனை செய்கிறது. 


மேலும் இம்மாதிரியான கேன் ஒன்றின் விலை சுமார் 500 முதல் 1800 ரூபாய் வரையில் சந்தையில் விற்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக சுத்தமான தண்ணீருக்காக நாம் தவித்து கொண்டுருக்கிறோம். தற்போது தண்ணீரை காசு கொடுத்து வாங்கி பருகி வருவது போல விரைவில் சுத்தமான காற்றையும் நாம் பாட்டிலில் வாங்கி சுவாசிக்க வேண்டிய நிலையை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம். வருங்கால சந்ததியினரையாவது ஆரோக்கியமாக வளர்க்க வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க முயற்சி செய்வோம். 

நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். நமது சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது. வருங்கால சந்ததியினர் என்ன செய்யப்போகிறார்கள் ? காலம் தான் பதில் சொல்லும்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close