[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று அட்சய திருதியை: கொண்டாட காரணம் என்ன..?

akshaya-tritiya-2016

நாடு முழுவதும் அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அட்சய திருதியை, ஹிந்து மத நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, ஜைன மதத்தினராலும் ஒரு புனித நாளாகக் கருதப்படுகிறது.

இன்று தமிழகத்தில் உள்ள சாமானியர்களை, பரவலாக ஈர்த்துவிட்ட அட்சய திருதியை, ஜைனர்கள் அதிகம் வாழும் ராஜஸ்தான், குஜராத் போன்ற மற்ற சில மாநிலங்களிலும் தனது இருப்பை வலுவாக பதிவு செய்து வருகிறது.

இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து, ஹிந்து மத நம்பிக்கை உள்ளவர்கள், பலவிதமாகச் சொல்கிறார்கள். அட்சய திருதியை நாளில்தான், மஹா விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் பிறந்ததாக நம்புபவர்கள் உண்டு. மறுபுறம், முழு முதல் கடவுள் என வழிபடப்படும் விநாயகர், வியாச முனிவருடன் சேர்ந்து, மஹாபாரதக் கதையை எழுதத் தொடங்கிய நாள்தான், இந்த அட்சய திருதியை நாள் என்கிறார்கள் பலர்.

இதுதவிர, சொத்துக்களுக்கு அதிபதி என்றும், தேவலோகத்தில் கடன் கொடுக்கும் தொழில் செய்பவருமான குபேரன், பெருஞ்செல்வத்தைப் பெற வேண்டி, கடுந்தவ வழிபாட்டில் ஈடுபட்டு, சிவன் மற்றும் லட்சுமியின் அருளால், என்றும் குறையாத செல்வம் பெற வரம் பெற்ற நாள்தான் இந்த அட்சய திருதியை என்ற நம்பிக்கையும் உள்ளது.

அதேபோல, சிவபெருமானின் தலையில் குடியிருந்த கங்கை, நதியாக வடிவம் பெற்று, பூமியைத் தொட்ட நாள், அட்சய திருதியை நாளாக சிலரால் கருதப்படுகிறது வேறு சிலரே, இன்னொரு கதை சொல்கிறார்கள். கிருஷ்ணரின் நெருங்கிய பால்ய நண்பரான குசேலர், நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் அவரை காண விரும்பி, உதவி கேட்டு வந்தபோது கையில் அவல்பொறியுடன் வந்து சந்தித்த நாளே அட்சய திருதியை என்கிறது கிருஷ்ண புராணங்கள்.

மறுபுறம், ஜைனர்களைப் பொறுத்தவரை, ஓராண்டுக்கும் மேல் உண்ணாவிரதம் மேற்கொண்ட ருசபநாதர், அதை முடித்துக் கொள்ளும்விதமாக கரும்பு சாறை உட்கொண்ட நாளை புனித நாளாக கருதுகின்றனர். அந்த நாள்தான் அட்சய திருதியை என்பது அவர்களது நம்பிக்கை. ஆக, வட இந்தியாவானாலும், தென்னிந்தியாவானாலும், மத நம்பிக்கையோடு தொடர்புள்ள நாளாக இருந்த இது, இன்று நகை வணிகர்களின் வர்த்தக திருநாளாக மாறியிருக்கிறது என்றால், மறுப்பதற்கில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close